எஸ்.இராமநாதன். கொழும்பு: எஸ்.இராமநாதன், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு: ஜே.அன்ட் எஸ். சேர்விசஸ் லிமிட்டெட்).
213 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14.5 சமீ.
இந்நூலின் முதல் 78 பக்கங்களில் யோகர் சுவாமிகளின் திருவாக்குகளான நாம் அறியோம், முழுவதும் உண்மை, எப்பவோ முடிந்த காரியம், ஒரு பொல்லாப்பும் இல்லை ஆகிய நான்கு திருவாக்குகளையும் திருமூலர் அருளிய திருமந்திரத்தின் உதவியுடன் தனித்தனிக் கட்டுரைகளாக விளக்கியிருக்கிறார். பக்கம் 78-213 வரை, யோகர் சுவாமிகளின் ‘நற்சிந்தனை’ நூலிருந்து தேர்ந்தெடுத்த அறிவுரைகளைத் தொகுத்து வழங்கியிருக்கிறார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 21189).