12152 – திருவாசகம்-சிவபுராணம்.

க.சு.நவநீதகிருஷ்ண பாரதியார். யாழ்ப்பாணம்: கு. பூரணானந்தா, மாவிட்டபுரம், 1வது பதிப்பு, தை 1953. (யாழ்ப்பாணம்: நாவலர் அச்சுக்கூடம்).

81 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.

மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய திருவாசகத்தின் சிவபுராணம் பகுதிக்கு மாவைக் கவுணியன் என்று போற்றப்பட்ட பண்டிதமணி க.சு.நவநீதகிருஷ்ண பாரதியார் (1889-1954) எழுதிய பேருரை இதுவாகும். அவரது மருமகனாரின் முயற்சியால் நூல்வடிவமாகியுள்ளது. யாழ்ப்பாண மாவட்டம் மாவிட்டபுரத்தைச் சேர்ந்த நவநீதகிருஷ்ண பாரதி தமிழ்நாட்டில் பிறந்தவர். கிருஷ்ணாபுரம், கரவட்டங்குடியில் சுப்பிரமணிய பாரதி என்பவருக்கு மகனாக இவர் பிறந்தார். இளம் வயதில் இலக்கணம், இலக்கியம், தருக்கம் ஆகியவற்றைக் கற்றுத் தேர்ந்தபின், திருவாவடுதுறை ஆதீனத்தில் திருமுறை ஆய்வில் ஈடுபட்டார். சேர் பொன்னம்பலம் இராமநாதனின் வேண்டுகோளுக்கிணங்க, 1917 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் இராமநாதன் மகளிர் கல்லூரியில் தமிழ்ப் பேராசானாகப் பணியாற்ற இலங்கை வந்தார். அதன் பின்னர் யாழ்ப்பாணவாசியாகி, ஈழத்து அறிஞராகவே இனங்காணப்பட்டார். இவரே உலகியல் விளக்கம் என்னும் தனிச் செய்யுள் நூலின் ஆசிரியராவார். அந்த நூலின் பதிப்பாசிரியராக விபுலானந்த அடிகள் பணியாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தகுந்தது. திருவாசகம், நன்னூல், திருமந்திரம் போன்ற நூல்களுக்கு உரை எழுதி இலங்கையில் மட்டுமன்றி இந்தியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் பாராட்டுப் பெற்றவர் இவர். தேசநேசன் இதழில் ஆசிரியராகவும் இவர் பணியாற்றியுள்ளார். இவரது மனைவி பெயர் சவுந்தரநாயகி. சமூகசேவகியான காலஞ்சென்ற பத்மாவதி பூர்ணானந்தா இவர்களது மகளாவார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2971).

ஏனைய பதிவுகள்

12524 – சைவத் தமிழ் திருமணங்கள்: ஓர் கையேடு.

இ.குமாரவடிவேல் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: குருபரன்-ஆரணி திருமணநாள் ஞாபகார்த்த வெளியீடு, 1வது பதிப்பு, பெப்ரவரி 2014. (யாழ்ப்பாணம்: கரிகணன் தனியார் நிறுவனம், இல. 424, காங்கேசன்துறை வீதி). 44 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5

12804 – சுவடுகள்: சிறுகதைத் தொகுப்பு.

மதுபாரதி (இயற்பெயர்: திருமதி பரமேஸ்வரி இளங்கோ). திருக்கோணமலை: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கிழக்கு மாகாணம், 1வது பதிப்பு, 2016. (திருக்கோணமலை: A.R.T. பிரின்டர்ஸ், 82, T.G. சம்பந்தர் வீதி). xvi, 139 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,

14767 சுடர் விளக்கு (நாவல்).

பா.பாலேஸ்வரி (இயற்பெயர்: செல்வி பாலேஸ்வரி பாலசுப்பிரமணியம்). திருக்கோணமலை: திருக்கோணமலைத் தமிழ் எழுத்தாளர் சங்கம், 471, திருஞானசம்பந்தர் வீதி, 1வது பதிப்பு, ஜுன் 1966. (மட்டக்களப்பு: ராஜன் அச்சகம், 25, முனைத்தெரு). 154 பக்கம், சித்திரங்கள்,

14276 கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை.

சித்ரா றஞ்சன் த சில்வா (விசாரணை ஆணைக்குழுவின் தலைவர்). கொழும்பு: கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க விசாரணை ஆணைக்குழு, 1வது பதிப்பு, நவம்பர் 2011. (பாதுக்க: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம், பானலுவ). xx, 433

12631 – சுதேச மருத்துவம் பற்றிய இலங்கைத் தமிழ் நூல்கள்:பொருள் மரபும் இலக்கியவளர்ச்சியில்அவற்றின் பங்கும்.

கனகசபாபதி நாகேஸ்வரன் (மூலம்), எஸ். வை.ஸ்ரீதர் (பதிப்பாசிரியர்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2013. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).