12154 – தெய்வீகம் மலரும் பொழுது.

மு.க.சிவபாதவிருதயர். வவுனியா: பகவான் ஸ்ரீ சத்யசாயி சேவா நிலையம், சாந்தம், பிரசாந்தி வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 2007. (யாழ்ப்பாணம்: கரிகணன் தனியார் நிறுவனம், இல. 424, காங்கேசன்துறை வீதி).

(4), 181 பக்கம், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×13.5 சமீ.

சாயிபக்தரான அமரர் மு.க.சிவபாதவிருதயர் (15.8.1945-19.10.2007) அவர்களின் சிவபதப்பேற்றையொட்டி அவரது நினைவாக 3.11.2007அன்று வெளியிடப்பட்ட அவரது தொகுப்புக்கள் அடங்கிய நூல் இதுவாகும். இவர் இலங்கை மக்கள் வங்கியின் வடவலயத்தின் ஓய்வுபெற்ற உதவிப்பொது முகாமையாளராகப் பணியாற்றியவர். திரு.மு.க.சிவபாதவிருதயர். ஒரு நல்ல பக்தன். தனது தொழிலையும் சிறப்பாகச் செய்து ஓய்வு நேரம் முழுவதையும் பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் போதனைகளை சத்யசாயி நிறுவனத்தில் உள்ள அங்கத்தவர்களுக்கும் மற்றவர் களுக்கும் விளக்க வேண்டும் என்ற பேரவாவின் காரணமாக பல நூல்களை வெளியிட்டிருக்கின்றார். அந்த வரிசையில் ‘தெய்வீகம் மலரும் பொழுது’ என்ற ஆழ்ந்த சிந்தனைகளைத் தூண்டும் நூல் வெளியாகியுள்ளது. பகவானின் போதனைகளை ஒரு தொடராகத் தொகுத்து ஆத்மீக சாதகர்கள் தங்கள் இலக்கை அடைவதற்கு வழிகாட்டியாகப் பயன்படுத்தக்கூடிய முறையில் இதனை வெளியிட்டிருக்கிறார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 50851).

ஏனைய பதிவுகள்

14674 உலக காவியம்: அறிவியல் ஆன்மீக காவியம்.

பாரதிபாலன் (இயற்பெயர்: ஜெயகுமார் குமாரசுவாமி). யாழ்ப்பாணம்: மகரிஷி பதிப்பகம், 55, ஆடியபாதம் வீதி, நல்லூர், 1வது பதிப்பு, மார்ச் 2014. (யாழ்ப்பாணம்: அன்ரா பிறிண்டேர்ஸ், இல. 356A, கஸ்தூரியார் வீதி). (24), 98 பக்கம்,

14510 சர்வதேச கலைப்பாலம்-2016 (பயணக் கட்டுரை).

யோ.யோண்சன் ராஜ்குமார், வைதேகி செல்மர் எமில் (தொகுப்பாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: திருமறைக் கலாமன்றம், 238, பிரதான வீதி, 1வது பதிப்பு, டிசெம்பர் 2017. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ் பிரின்டேர்ஸ், முத்திரைச் சந்தியடி, நல்லூர்). iii, (3),

12610 – உயிர்ப்பல்வகைமை Biodiversity.

வீ.ச.சிவகுமாரன். கொழும்பு 6: வீ.ச.சிவகுமாரன், இந்த மகளிர் கல்லூரி, 1வது பதிப்பு, நவம்பர் 2001. (கொழும்பு: சு.கிருஷ்ணமூர்த்தி, கிரிப்ஸ்). (6), 122 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 175., அளவு: 21.5×14.5 சமீ. க.பொ.த.

12842 – தேம்பாவணி இரட்சணிய யாத்திரிகம் இயேசு புராணமாதிய மூன்று கிறித்தவ இலக்கிய நூல்களின் நூல் ஆராய்வு.

ஈழத்துப் பூராடனார் (இயற்பெயர்: க.தா. செல்வராஜகோபால்). கனடா: சீவன் பதிப்பகம், இல. 3, 1292 Sherwood Mills Blvd,Mississauga L5V1S6, Ontario,1வது பதிப்பு, 2009. (கனடா: ரீ கொப்பி, டொரன்டோ). xxxviஇ 312 பக்கம்,

14524 பிள்ளை நிலா: சிறுவர் பாடல்கள்.

செல்லையா குமாரசாமி. யாழ்ப்பாணம்: செ.ல்லையா குமாரசாமி, நாவற்குழி மேற்கு, கைதடி, 1வது பதிப்பு, ஏப்ரல் 2018. (யாழ்ப்பாணம்: வைரஸ் கிரப்பிக்ஸ், இணுவில்). (8), 60 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 200., அளவு: 25×18

12733 – ஆங்கில இலக்கிய வரலாறு.

எஸ்.ஜெபநேசன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). xiv, 125 பக்கம், விலை: ரூபா