ம.வே.திருஞானசம்பந்தப் பிள்ளை (பொழிப்புரை, தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சைவ பரிபாலன சபை, 3வது பதிப்பு, 1954, 1வது பதிப்பு, விகிர்தி வருடம் 1950. (யாழ்ப்பாணம்: சைவப்பிரகாச யந்திரசாலை).
(4), 68 பக்கம், விலை: 65 சதம், அளவு: 18×12 சமீ.
திருஞான சம்பந்தமூர்த்தி நாயனாரின் திருவாலவாய் திருநீற்றுப் பதிகம், திருக்கேதீச்சரத் திருப்பதிகம், திருக்கோணமலைத் தேவாரம் ஆகியனவும், திருநாவுக்கரசு நாயனாரின் நமச்சிவாயத் திருப்பதிகம், சுந்தரமூர்த்தி நாயனார் அருளிய திருக்கேதீச்சரத் தேவாரம் ஆகியனவும், திருவாசகம், திருப்பள்ளியெழுச்சி, கோயின்மூத்த திருப்பதிகம், கோயிற்றிருப்பதிகம், செத்திலாப்பத்து, அடைக்கலப்பத்து ஆகியனவும் இந்நூலில் தொகுக்கப்பெற்றுள்ளன. இலங்கை கல்வித் திணைக்களத்தினால், தமிழ் ஆங்கில எஸ்.எஸ்.சீ. பரீட்சைக்குச் சைவசமய பாடநூல்களுள் ஒன்றாக விதிக்கப்பட்ட நூல் இது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 10732).