12162 – நினைத்ததை தரும் திருமுறைப் பதிகங்கள்.

ஆறுமுகம் கந்தையா (தொகுப்பாசிரியர்). கொழும்பு 11: அஷ்டலஷ;மி பதிப்பகம், 320, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு 11: அஷ்டலக்ஷ்மி பதிப்பகம், 320, செட்டியார் தெரு).

iv, 71 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14.5 சமீ.

இறைவன் குருவருளைப் பெற, இம்மை நலன்களைப் பெற, மகப்பேற்றைப் பெற, மணமங்கலத்தைப் பெற, மன இளைப்பைத் தீர்க்க என இன்னோரன்ன வேண்டுதல்களுடன் இறைவனை இறைஞ்சிப் போற்றுவதற்கு எம்மிடம் உள்ள இறைவழிபாட்டுப் பாடல்களில் பிரபல்யமானவை திருமுறைப் பதிகங்களாகும். மேற்கண்ட ஒவ்வொரு தேவைக்கும், மேலதிகமாக உயிருக்கு உறுதியும் சகல ஆபத்துக்களும் இருதயக் கோளாறு போன்ற நோய்கள் அண்டாது தூரநிற்கவென, எலும்புமுறிவு படுகாயம் தீவினைகளைத் தீர்ப்பதற்கென என்றவாறாகப் பல்வேறு காரணங்களைக் குறித்துப் பாடவேண்டிய சிறப்புத் திருமுறைகளை தனித்தனிப் பகுதிகளாக வகுத்தும் தொகுத்தும் இந்நூலில் தந்திருக்கின்றார் சைவநெறிக் காவலர் ஆறுமுகம் கந்தையா அவர்கள். நூலின் மேலட்டையில் ‘நீடூழி வாழ திருமுறைகள்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 32154).

ஏனைய பதிவுகள்