இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம். கொழும்பு 2: இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், காப்புறுதி இல்லம், 9வது மாடி, 21, வாக்ஷோல் வீதி, 1வது பதிப்பு, ஜுலை 1992. (கொழும்பு 2: ராஜன் பிரின்டர்ஸ், 31 கியூ லேன்).
(4), 43 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×12.5 சமீ.
அறநெறிப் பாடசாலைகளுக்கான வெளியீட்டுத் தொடரில் முதலாவது இலவச வெளியீடாக வெளியிடப்பெற்ற நூல். திருமுறைப் பாடல்களின் பொருளை விளங்கிப் பாராயணம் செய்யவும், பண்ணுடன் பாடுவதற்கும் துணையாக அமையக்கூடியதாகத் தொகுக்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 13149).