12167 – முருகன் பாடல்: முதலாம் பகுதி.

தொகுப்பாளர் குழு. கொழும்பு 11: தெட்சணத்தார் வேளாளர் மகமை பரிபாலன சொசைட்டி லிமிட்டெட், 98 ஜிந்துப்பிட்டி தெரு, 1வது பதிப்பு, ஆவணி 1992. (சென்னை 600002: காந்தளகம், 4, முதல்மாடி, 834, அண்ணா சாலை).

(16), பக்கம் 1-381, தகடுகள், விலை: ஆறு பகுதிகளும் ரூபா 2100., அளவு: 22×14 சமீ.

இந்நூல், இரண்டு தொகுதிகளில் தொகுதிக்கு ஆறு பகுதிகளாக, 12 பகுதி களில் (தனித்தனி நூல்களாக) வெளியிடப்பட்டுள்ளது. முதலாம் பகுதியில் திருச்செந்தூர் அகவல், கந்தரந்தாதி, திருச்செந்தூர் நிரோட்டகயமக அந்தாதி, மருதமலை யமக அந்தாதி, கந்தரநுபூதி, கந்தரலங்காரம், திருப்போரூர் அலங்காரம், மருதமலை அலங்காரம், திருமுருகாற்றுப்படை, திருத்தணிகையாற்றுப்படை, கதிரேசன்பேரில் ஆனந்தக் களிப்பு, ஆரணி ஞானியார் மடாலயத்துக் கந்தருலா, கொடுமளூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஞான உலா, திருஎழுகூற்றிருக்கை, கிளிக்கண்ணி, திருச்செந்திற் கலம்பகம், மயிலாசலக் கலம்பகம், கந்தர் கலித்துறை, ஸ்ரீஸ்கந்தகுரு கவசம், கந்தர்சஷ்டிக் கவசம், கதிர்காமத் திருமுருகன் கீர்த்தனங்கள், திருமலையாண்டவர் குறவஞ்சி, முருகக் கடவுள் மும்மணிக்கோவை, குமரகிரி மும்மணிக் கோவை, சங்கப் பாடல்களில் முருகன் (பரிபாடல், புறநானூறு, சிலப்பதிகாரம், இன்னா நாற்பது, ஐந்திணை ஐம்பது) ஆகிய பக்தி இலக்கியங்கள் இப்பகுதியில் தொகுக்கப்பட்டுள்ளன. தொகுப்பின் பொருளடக்கம் முழுமையும் எல்லாப் பகுதிகளிலும் முன்பக்கங்களில் இடம்பெற்றுள்ளன. பாட்டு முதற்குறிப்பு அகராதி, பாட்டுடைக் கோவில் அகராதி, பாட்டுத் தலைப்பு அகராதி, ஆசிரியர் அகராதி என்பன இத்தொகுதியின் இறுதிப் பகுதிகளாக உள்ளன. முதலாம் பகுதி உருவாக அணிசெய்தவர்களாக கொழும்பு 11இல் 267, செட்டியார் தெருவிலுள்ள விடிவி பவுண்டேஷன் நிறுவனத்தின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 27240).

ஏனைய பதிவுகள்

12896 – வைகுந்த திலகம்: ஆயர்பாடி ஆழ்வார் ஸ்ரீ வே.த.மயில்வாகனம் நினைவு மலர்.

மலர் வெளியீட்டுக் குழு. தெல்லிப்பழை: திருமதி லட்சுமி மயில்வாகனம் குடும்பத்தினர், ஆயர்பாடி, மாவிட்டபுரம், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (அச்சக விபரம் தரப்படவில்லை). (2), 74 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை,

12410 – சிந்தனை: தொகுதி VIII 1996 முதல் தொகுதி XI 1999 வரை இணைந்த வெள்ளிவிழாச் சிறப்பிதழ்

இராசரத்தினம் சிவச்சந்திரன் (இதழாசிரியர்). யாழ்ப்பாணம்: கலைப்பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, நவம்பர் 1999. (அச்சக விபரம் தரப்படவில்லை). (8), 142 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 25×20 சமீ. வெள்ளிவிழாச்