12169 – முருகன் பாடல்: மூன்றாம் பகுதி.

தொகுப்பாளர் குழு. கொழும்பு 11: தெட்சணத்தார் வேளாளர் மகமை பரிபாலன சொசைட்டி லிமிட்டெட், 98 ஜிந்துப்பிட்டி தெரு, 1வது பதிப்பு, ஆவணி 1992. (சென்னை 600002: காந்தளகம், 4, முதல்மாடி, 834, அண்ணா சாலை).

(8), பக்கம் 799-1205, தகடுகள், விலை: ஆறு பகுதிகளும் ரூபா 2100., அளவு: 22×14 சமீ.

இந்நூல், இரண்டு தொகுதிகளில் தொகுதிக்கு ஆறு பகுதிகளாக, 12 பகுதிகளில் (தனித்தனி நூல்களாக) வெளியிடப்பட்டுள்ளது. தொகுப்பின் பொருளடக்கம் முழுமையும் எல்லாப் பகுதிகளிலும் முன்பக்கங்களில் இடம்பெற்றுள்ளன. பாட்டு முதற்குறிப்பு அகராதி, பாட்டுடைக் கோவில் அகராதி, பாட்டுத் தலைப்பு அகராதி, ஆசிரியர் அகராதி என்பன இத்தொகுதியின் இறுதிப்பகுதிகளாக உள்ளன. இம் மூன்றாம் பகுதியில் முன்னைய தொகுதியில் இறுதியாக இடம்பெற்ற திருப்புகழ் தொகுப்பின் தொடர்ச்சி இடம்பெற்றுள்ளன. திருப்புகழின் இறுதிப்பகுதி அடுத்த தொகுதியிலும் தொடர்ந்துள்ளது. மூன்றாம் பகுதி உருவாக அணிசெய்தவராக கொழும்பிலுள்ள திரு.வி.சங்கர் அவர்களின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 50756).

ஏனைய பதிவுகள்

Hockey Character Position Rating Huge Gains

Articles Players Paradise online pokie: Exciting Popular features of Hockey Hero Position Explained Hockey Character Slot Features Hockey Character Faqs: Methods to Their Finest Questions