12170 – முருகன் பாடல்: நான்காம் பகுதி.

தொகுப்பாளர் குழு. கொழும்பு 11: தெட்சணத்தார் வேளாளர் மகமை பரிபாலன சொசைட்டி லிமிட்டெட், 98 ஜிந்துப்பிட்டி தெரு, 1வது பதிப்பு, ஆவணி 1992. (சென்னை 600002: காந்தளகம், 4, முதல்மாடி, 834, அண்ணா சாலை).

(8), பக்கம் 1206-1607, தகடுகள், விலை: ஆறு பகுதிகளும் ரூபா 2100., அளவு: 22×14 சமீ.

இந்நூல், இரண்டு தொகுதிகளில் தொகுதிக்கு ஆறு பகுதிகளாக, 12 பகுதிகளில் (தனித்தனி நூல்களாக) வெளியிடப்பட்டுள்ளது. தொகுப்பின் பொருளடக்கம் முழுமையும் எல்லாப் பகுதிகளிலும் முன்பக்கங்களில் இடம்பெற்றுள்ளன. பாட்டு முதற்குறிப்பு அகராதி, பாட்டுடைக் கோவில் அகராதி, பாட்டுத் தலைப்பு அகராதி, ஆசிரியர் அகராதி என்பன இத்தொகுதியின் இறுதிப்பகுதிகளாக உள்ளன. நான்காவது தொகுதியில் முன்னைய தொகுதியில் தொடர்ந்த திருப்புகழின் இறுதிப் பகுதியும், அதனைத் தொடர்ந்து நல்லூர்க் கந்தன் திருப்புகழ், திருமுறைகளில் முருகப் பெருமான், செந்திலாண்டவர் துதியமுது, வண்டுவிடு தூது, செல்வச்சந்நிதி முருகன் பேரில் கிளித்தூது, திருச்செந்தூர் நொண்டி நாடகம், தணிகாசலப் பஞ்சரத்தினம், ஆறுமுகசுவாமி பஞ்சரத்தினம், மருதமலைச் சந்தப் பதிகம், குமரகுரு பதிகம், இரத்தினகிரிப் பாலமுருகன் உயிர்முதற் போற்றிப் பதிகம், திருமலை முருகன் பள்ளு, வையாபுரிப் பள்ளு, சண்முகப் பாமாலை, இரத்தினகிரிப் பாலமுருகன் பாமாலை, ஆகிய பக்தி இலக்கியப் பாக்கள் இடம் பெற்றுள்ளன. நான்காம் பகுதி உருவாக அணிசெய்தவராக சென்னையிலுள்ள ஈஸ்டர்ன் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனததின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. (இந் நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 27243).

ஏனைய பதிவுகள்

Joey Reiman Försåvit Nätcasinon Inom Sverige

Content Artikelkälla: Begagna Dina Egna Värden För att Skapa En Konto Thrills Casino Spelutbudet Befinner si Mångsidigt Gällande Samtliga Casinon Faktorerna varierar samt betänkligt bundenhet