12172 – முருகன் பாடல்: ஆறாம் பகுதி.

தொகுப்பாளர் குழு. கொழும்பு 11: தெட்சணத்தார் வேளாளர் மகமை பரிபாலன சொசைட்டி லிமிட்டெட், 98 ஜிந்துப்பிட்டி தெரு, 1வது பதிப்பு, ஆவணி 1992. (சென்னை 600002: காந்தளகம், 4, முதல்மாடி, 834, அண்ணா சாலை).

(8), பக்கம் 2022-2403, தகடுகள், விலை: ஆறு பகுதிகளும் ரூபா 2100., அளவு: 22×14 சமீ.

இந்நூல், இரண்டு தொகுதிகளில் தொகுதிக்கு ஆறு பகுதிகளாக, 12 பகுதிகளில் (தனித்தனி நூல்களாக) வெளியிடப்பட்டுள்ளது. தொகுப்பின் பொருளடக்கம் முழுமையும் எல்லாப் பகுதிகளிலும் முன்பக்கங்களில் இடம்பெற்றுள்ளன. பாட்டு முதற்குறிப்பு அகராதி, பாட்டுடைக் கோவில் அகராதி, பாட்டுத் தலைப்பு அகராதி, ஆசிரியர் அகராதி என்பன இத்தொகுதியின் இறுதிப் பகுதிகளாக உள்ளன. இவ்வாறாம் பகுதியில் மயிலம் முருகன் பிள்ளைத்தமிழ், மாவைப் பிள்ளைத்தமிழ், வைத்தீஸ்வரன் கோவில் முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ், ஷேத்திரக்கோவைப் பிள்ளைத்தமிழ், திருச்செந்தூர் சுப்பிரமணிய புஜங்கம்-1, திருச்செந்தூர் சுப்பிரமணிய புஜங்கம்-2, திருச்செந்தூர் சுப்பிரமணிய புஜங்கம்-3, திருவகுப்பு, வேல் விருத்தம், மயில் விருத்தம், சேவல் விருத்தம், தொட்டிக்கலை திருத்தணிகைத் திருவிருத்தம், திருமயிலைச் சிங்காரவேலன் திருவிருத்தம், திருச்செந்தூர்க் கந்தர் கலிவெண்பா, தணிகை வெண்பா, கதிரைச் சிலேடை வெண்பா ஆகிய பக்தி இலக்கியங்களை தொகுத்திருக்கின்றார்கள். ஆறாம் பகுதி உருவாக அணிசெய்தவராக கொழும்பு 11, செட்டியார் தெரு, 255ஆம் இலக்கத்தில் வதியும் சு.அசோகன் அவர்களின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 27245).

ஏனைய பதிவுகள்

Sizing Your Wagers Safely

Posts Probe Bets Conclusions To your Nuts In the Casino poker Web based poker Etiquette Inside On-line poker Smashing A top Hunl Web based poker