12172 – முருகன் பாடல்: ஆறாம் பகுதி.

தொகுப்பாளர் குழு. கொழும்பு 11: தெட்சணத்தார் வேளாளர் மகமை பரிபாலன சொசைட்டி லிமிட்டெட், 98 ஜிந்துப்பிட்டி தெரு, 1வது பதிப்பு, ஆவணி 1992. (சென்னை 600002: காந்தளகம், 4, முதல்மாடி, 834, அண்ணா சாலை).

(8), பக்கம் 2022-2403, தகடுகள், விலை: ஆறு பகுதிகளும் ரூபா 2100., அளவு: 22×14 சமீ.

இந்நூல், இரண்டு தொகுதிகளில் தொகுதிக்கு ஆறு பகுதிகளாக, 12 பகுதிகளில் (தனித்தனி நூல்களாக) வெளியிடப்பட்டுள்ளது. தொகுப்பின் பொருளடக்கம் முழுமையும் எல்லாப் பகுதிகளிலும் முன்பக்கங்களில் இடம்பெற்றுள்ளன. பாட்டு முதற்குறிப்பு அகராதி, பாட்டுடைக் கோவில் அகராதி, பாட்டுத் தலைப்பு அகராதி, ஆசிரியர் அகராதி என்பன இத்தொகுதியின் இறுதிப் பகுதிகளாக உள்ளன. இவ்வாறாம் பகுதியில் மயிலம் முருகன் பிள்ளைத்தமிழ், மாவைப் பிள்ளைத்தமிழ், வைத்தீஸ்வரன் கோவில் முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ், ஷேத்திரக்கோவைப் பிள்ளைத்தமிழ், திருச்செந்தூர் சுப்பிரமணிய புஜங்கம்-1, திருச்செந்தூர் சுப்பிரமணிய புஜங்கம்-2, திருச்செந்தூர் சுப்பிரமணிய புஜங்கம்-3, திருவகுப்பு, வேல் விருத்தம், மயில் விருத்தம், சேவல் விருத்தம், தொட்டிக்கலை திருத்தணிகைத் திருவிருத்தம், திருமயிலைச் சிங்காரவேலன் திருவிருத்தம், திருச்செந்தூர்க் கந்தர் கலிவெண்பா, தணிகை வெண்பா, கதிரைச் சிலேடை வெண்பா ஆகிய பக்தி இலக்கியங்களை தொகுத்திருக்கின்றார்கள். ஆறாம் பகுதி உருவாக அணிசெய்தவராக கொழும்பு 11, செட்டியார் தெரு, 255ஆம் இலக்கத்தில் வதியும் சு.அசோகன் அவர்களின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 27245).

ஏனைய பதிவுகள்

12079 – திருக்கோணமலைப் புராதன திருவுருவங்கள்: மேற்படி தலத் தேவாரப் பதிகத்துடன்.

E.P.இராசையா. யாழ்ப்பாணம்: சைவ பரிபாலன சபை வெளியீடு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1951. (யாழ்ப்பாணம்: சைவப்பிரகாச யந்திரசாலை). 12 பக்கம், விலை: சதம் 10., அளவு: 17×11.5 சமீ. இந்நூலில் அம்பிகாதேவியின் ஆலயம், இதன்

No deposit Cell Incentives Us all

Material Contact Invoice Gambling Obtain the Only Casinos on the web With a Great Gaming Extra Internet casino Pay out Because of the Mobile Processors

12103 – சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் திருப்பாற்கோவை: 22ஆவது ஆண்டு மண்டலபூஜை சிறப்பு மலர்-1997.

க.ரவீந்திரகுமார் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 13: சபரிமலை தீர்த்த யாத்திரைக் குழு, அகில இலங்கை ஐயப்ப சேவா சங்கம், இல. 11, ஆட்டுப்பட்டி ஒழுங்கை, 1வது பதிப்பு, டிசம்பர் 1997. (கொழும்பு 14: விக்ரம் பிரின்டர்ஸ்,

14299 நிரந்தரப் புரட்சியும் சோசலிச அனைத்துலக வாதத்துக்கான போராட்டமும்.

டேவிட் நோர்த். கொழும்பு 10: தொழிலாளர் பாதை வெளியீட்டாளர்கள், இல. 90, 1ஆம் மாளிகாகந்தை ஒழுங்கை, மருதானை, 1வது பதிப்பு, ஜுன் 1993. (மகரகம: பியதாச அச்சகம், இல. 51, நாகஹவத்த வீதி). (2),