12174 – முருகன் பாடல்: எட்டாம் பகுதி.

தொகுப்பாளர் குழு. கொழும்பு 11: தெட்சணத்தார் வேளாளர் மகமை பரிபாலன சொசைட்டி லிமிட்டெட், 98 ஜிந்துப்பிட்டி தெரு, 1வது பதிப்பு, ஆவணி 1995. (சென்னை 600002: காந்தளகம், 4, முதல்மாடி, 834, அண்ணா சாலை).

(7), பக்கம் 2796-3203, தகடுகள், விலை: ஆறு பகுதிகளும் ரூபா 2700., அளவு: 22×14 சமீ.

இந்நூல், இரண்டு தொகுதிகளில் தொகுதிக்கு ஆறு பகுதிகளாக, 12 பகுதிகளில் (தனித்தனி நூல்களாக) வெளியிடப்பட்டுள்ளது. தொகுப்பின் பொருளடக்கம் முழுமையும் எல்லாப் பகுதிகளிலும் முன்பக்கங்களில் இடம்பெற்றுள்ளன. பாட்டு முதற்குறிப்பு அகராதி, பாட்டுடைக் கோவில் அகராதி, பாட்டுத் தலைப்பு அகராதி, ஆசிரியர் அகராதி என்பன இத்தொகுதியின் இறுதிப் பகுதிகளாக உள்ளன. எட்டாவது தொகுதியில் திருமுருகாற்றுப்படை, திருவேல் திருவுலா, மயூரகிரி உலா, ஆடுக ஊஞ்சல் ஆடுகவே, செல்வச் சந்நிதிக் கந்தன் திருப்பொன்னூ ஞ்சல், செல்வச் சந்நிதி முருகன் பெயரில் திருவூஞ்சல், செல்வச்சந்நிதி வேலர் திருவூஞ்சல், மயிலைச் சிவசுப்பிரமண்யர் ஊஞ்சல், வேலாயுதக் கண்ணி, செல்வச்சந்நிதி முருகன் கண்ணிகள், குறுக்குத்துறைக் கலம்பகம், குன்றக்குடியில் கோயில் கொண்டுள்ள முருகப் பெருமான் கலம்பகம், சென்னைக் கந்தகோட்ட முருகப்பெருமான் கலம்பகம், ஸ்ரீ தேவசேனாபதி கவசம், ஸ்ரீ வள்ளி நாயகன் நாடகக் காவியம், கதிரை முருகன் கீர்த்தனை, மண்டூர் முருகன் பேரில் கீர்த்தனை கள், சூரசங்காரம் முதலிய பக்திக் கீர்த்தனைகள், பேராதனைப் பல்கலைக்கழகத் திருமுருகன் கீர்த்தனைகள், மாவைக் கந்தன் பக்திரசக் கீர்த்தனைகள், குறுக்குத்துறைக் குறவஞ்சி, குறுக்குத்துறைக் கொச்சகக் கலிப்பா ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 57673).

ஏனைய பதிவுகள்

Black-jack Strategy

Articles What are This type of Blackjack Terms: Hit, Remain, Split, Twice? On line Black-jack The real deal Currency Rummy Black-jack Blackjack Simulation Can present