12175 – முருகன் பாடல்: ஒன்பதாம் பகுதி.

தொகுப்பாளர் குழு. கொழும்பு 11: தெட்சணத்தார் வேளாளர் மகமை பரிபாலன சொசைட்டி லிமிட்டெட், 98 ஜிந்துப்பிட்டி தெரு, 1வது பதிப்பு, ஆவணி 1995. (சென்னை 600002: காந்தளகம், 4, முதல்மாடி, 834, அண்ணா சாலை).

(7), பக்கம் 3204-3631, தகடுகள், விலை: ஆறு பகுதிகளும் ரூபா 2700., அளவு: 22×14 சமீ.

இந்நூல், இரண்டு தொகுதிகளில் தொகுதிக்கு ஆறு பகுதிகளாக, 12 பகுதிகளில் (தனித்தனி நூல்களாக) வெளியிடப்பட்டுள்ளது. தொகுப்பின் பொருளடக்கம் முழுமையும் எல்லாப் பகுதிகளிலும் முன்பக்கங்களில் இடம்பெற்றுள்ளன பாட்டு முதற்குறிப்பு அகராதி, பாட்டுடைக் கோவில் அகராதி, பாட்டுத் தலைப்பு அகராதி, ஆசிரியர் அகராதி என்பன இத்தொகுதியின் இறுதிப் பகுதிகளாக உள்ளன. இத்தொகுதியில் திருப்பரங்கிரி மும்மணிக்கோவை, மயிலணி முருகவேள் மும்மணிக்கோவை, திருச்செந்தில் முருகன் சந்நிதி முறை, சந்நிதிக் கந்தன் சரிதை, செல்வச்சந்நிதி முருகன் காவடிச்சிந்து, நல்லூர் முருகன் காவடிச் சிந்து, பினாங்கு தண்ணீர்மலை வேல்முருகன் காவடிச்சிந்து, திருப்புகழ் (1327-1378), குன்றக்குடிப் படைவீட்டுத் திருப்புகழ், குன்றக்குடி முருகன் திருப்புகழ்ப் பதிகம், மயிலம் சுப்பிரமணியர் துதியமுது, பழநியாண்டவர் மயில்விடு தூது, முருகக்கடவுள்மீது கிளித்தூது, நல்லூர் நாற்பது, செல்வச்சந்நிதி சுப்பிரமணிய சுவாமி நிந்தாஸ்துதி, செல்வச்சந்நிதி ஒருபா ஒருப‡து, ஸ்ரீமுருகக் கடவுள் அலங்கார பஞ்சகம், ஆறெழுத்துப்பத்து, இரத்தினகிரிப் பாலமுருகன் அடைக்கலப்பத்து, இரத்தினகிரிப் பாலமுருகன் குயிற்பத்து, வயலூர்ப் பத்து, அநுராதபுரக் கதிரேசன் கோவில் பதிகம், குன்றக்குடிப் பதிகம் 1,2,3., சிங்கை நகர் தண்டபாணி வருகைப் பதிகம், செல்வச் சந்நிதித் திருப்பதிகம், திருக்குமரன் திருப்பதிகம், திருச்செந்தூர் பாதயாத்திரைப் பதிகம், திருச்சந்நிதிப் பதிகம், திருப்பரங்குன்றப் பதிகம், தென் பசிபிக் காவலர் அருள்மிகு பிஜி முருகன் பதிகம், நல்லைப் பதிகம், மாவைக் கதிர்காம வடிவேலர் பதிகம், மாவைக் கந்தன் பதிகம், மாவைச் சுப்பிரமணியக் கடவுள் பதிகம், மாவைநகர் முருகவேள் பதிகம், மாவைப் பதிகம், செல்வச்சந்நிதி முருகன் திருப்பள்ளியெழுச்சி, திருச்செந்திலாண்டவன் திருப்பள்ளியெழுச்சி, கதிரைமலைப்பள்ளு ஆகிய பாடல்கள் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 57674).

ஏனைய பதிவுகள்