12176 – முருகன் பாடல்: பத்தாம் பகுதி.

தொகுப்பாளர் குழு. கொழும்பு 11: தெட்சணத்தார் வேளாளர் மகமை பரிபாலன சொசைட்டி லிமிட்டெட், 98 ஜிந்துப்பிட்டி தெரு, 1வது பதிப்பு, ஆவணி 1995. (சென்னை 600002: காந்தளகம், 4, முதல்மாடி, 834, அண்ணா சாலை).

(7), பக்கம் 3632-4035, தகடுகள், விலை: ஆறு பகுதிகளும் ரூபா 2700., அளவு: 22×14 சமீ.

இந்நூல், இரண்டு தொகுதிகளில் தொகுதிக்கு ஆறு பகுதிகளாக, 12 பகுதிகளில் (தனித்தனி நூல்களாக) வெளியிடப்பட்டுள்ளது. தொகுப்பின் பொருளடக்கம் முழுமையும் எல்லாப் பகுதிகளிலும் முன்பக்கங்களில் இடம்பெற்றுள்ளன. பாட்டு முதற்குறிப்பு அகராதி, பாட்டுடைக் கோவில் அகராதி, பாட்டுத் தலைப்பு அகராதி, ஆசிரியர் அகராதி என்பன இத்தொகுதியின் இறுதிப் பகுதிகளாக உள்ளன. பத்தாவது தொகுதியில் செல்வச் சந்நிதிக் கந்தர் நாமபஜனை, செந்தில் முருகன் வழிநடைப் பாட்டு, முருகன் பாட்டு, வேல் பாட்டு, வேலன் பாட்டு, ஆய்க்குடி முருகன் பிள்ளைத் தமிழ், இணுவை முருகன் பிள்ளைத் தமிழ், கச்சிக் குமரகோட்டக் கடவுள் பிள்ளைத் தமிழ், கழுகுமலை அருள்மிகு சுப்பிரமணியக் கடவுள் பேரில் பிள்ளைத் தமிழ், காஞ்சிபுரம் திருக்குமரகோட்ட முருகன் பிள்ளைத் தமிழ், கரவை முருகன் பிள்ளைத் தமிழ், கீழ்வேளூர் முருகன் பிள்ளைத் தமிழ், குமாரகோயில் அருள்மிகுவேலாயுதப் பெருமாள் பிள்ளைத் தமிழ் ஆகிய பக்தி இலக்கியங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 57675).

ஏனைய பதிவுகள்