சி.அப்புத்துரை (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: குப்பிழானூர் அம்பலவாணர் நடராசா நினைவு மஞ்சரி, குப்பிழான், 1வது பதிப்பு, மார்ச் 2006. (கொழும்பு 13: கீதா பதிப்பகம்).
136 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12 சமீ.
கலாபூஷணம் பண்டிதர் சி.அப்புத்துரை அவர்கள் தொகுத்திருக்கும் இந்நூலின் முதற்பகுதி பன்னிரு திருமுறைகளின் சில தேர்ந்த பாக்களையும், இரண்டாம் பகுதி, அருள்மிகு முத்துமாரியம்பாள் ஆலய வரலாறு, திருப்பொற்சுண்ணம், முத்துமாரியம்பாள் ஆலயத் திருவூஞ்சல், சகலகலாவல்லி மாலை, கௌரி காப்பு, கந்தரநுபூதி, பிள்ளையார் கதை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, அபிராமி அந்தாதி, ஸ்ரீதுர்க்கா தேவி அஷ்டகம், ஸ்ரீ லிங்காஷ்டகம், கருமாரி அம்மன் ஸ்தோத்திரம் ஆகியவற்றையும் உள்ளடக்குகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 38498).