கா.சிவபாதசுந்தரம் (தலைவர்). யாழ்ப்பாணம்: தையிட்டி இந்து இளைஞர் சங்கம், தையிட்டி, 1வது பதிப்பு, 1970. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சு நிலையம்).
72 பக்கம், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12.5 சமீ.
தையிட்டி, இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள வலிகாமம் வடக்குப் பிரதேசச் செயலாளர் பிரிவில் அமைந்துள்ள ஓர் ஊர். மிகவும் உயர்ந்த திடல்களை கொண்ட இடமாகவும் ஆழமான கிணறுகளை கொண்ட இடமாகவும் அமைந்துள்ள ஊர் தையிட்டி. இது தையிட்டி வடக்கு, தையிட்டி கிழக்கு, தையிட்டி தெற்கு ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளுக்குள் உள்ளன. தையிட்டிக்கு வடக்கில் வங்காள விரிகுடாவும், மேற்கில் காங்கேசன்துறையும், கிழக்கில் மயிலிட்டியும், தெற்கில் பளைவீமன்காமமும் எல்லைப் பிரதேசங்களாகக் காணப்படுகின்றன. தையிட்டி தெற்கில் ஏறக்குறைய 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த ‘கணையவிற் பிள்ளையார் அல்லது குளத்தடி பிள்ளையார் ஆலயம்’ அமைந்துள்ளது. சைவாபி மானியும் தையிட்டி கணையவில் பிள்ளையார் கோவிலில் கூட்டுப்பிரார்த்தனை நிகழ்வு ஆரம்பிப்பதற்குக் காரணகர்த்தருமான அமரர் மா.முருகேசம் பிள்ளைஅவர்களின் நினைவாக வெளியிடப்பட்டுள்ள இந்நூலில் பிள்ளையார் கதை, போற்றித் திருவகவல், வருக்கக்கோவை, தத்துவஞானத் திருவகவல், தேவாரம், திருவாசகம் முதலான பக்தி இலக்கியங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 31707).