12182 – ஸ்ரீ நவராத்திரி நாயகியும் தோத்திர மாலையும்.

ஸ்ரீ விசுவாம்பா விசாலாட்சி மாதாஜி. கொழும்பு: உலக சைவப் பேரவை, இலங்கைக் கிளை, 1வது பதிப்பு, மார்கழி 1999. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).

xiv, 96 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 22×14 சமீ.

இலகுவான செந்தமிழில் சுவை குன்றாது தோத்திர, பக்திப் பாடல்களை யாத்துத் தந்துள்ள நூலாசிரியர் சைவநன்மணி, சிவமயச் செல்வி, புலவர் ஸ்ரீ விசுவாம்பா விசாலாட்சி மாதாஜி, கொழும்பு, பேலியகொடை ஸ்ரீ பூபால விநாயகர் ஆலய ஆஸ்தானப் புலவராவார். இந்நூலின் முதற் பகுதி (பாகம் 1) வசன நடையில் ஏழு அத்தியாயங்களை உள்ளடக்குகின்றது. தாய் வழிபாடு, சக்தி வழிபாடும் சக்திகளின் தன்மையும், ஆதி பராசக்தியின் வலிமையின் பெருமை, ஸ்ரீமகாலட்சுமி தேவி, ஸ்ரீ தேவி பூசை, தேவி உபாசனை, நவராத்திரி விரதம் ஆகிய தலைப்புகளில் இவ்வத்தியாயங்கள் எழுதப்பட்டுள்ளன. இரண்டாவது பாகம் புலவர் ஸ்ரீ விசுவாம்பா விசாலாட்சி மாதாஜி தொகுத்தளித்துள்ள சக்தி தோத்திரச் செய்யுள் களைக் கொண்டுள்ளது. ஆசிரியரின் 67ஆவது வயதில் வெளிவந்துள்ள அவரது 18ஆவது நூல் இதுவாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 21185).

ஏனைய பதிவுகள்

12792 – தமிழழகி: ஐந்தாவது வீரமாமுனிவர் காண்டம்.

க.தா.செல்வராஜகோபால் (புனைபெயர்: ஈழத்துப் பூராடனார்), எட்வேட் இதயச்சந்திரா (பதிப்பாசிரியர்). கனடா: சீவன் பதிப்பகம், இல. 3, 1292 Sherwood Mills Blvd, Mississauga L5V1S6, Ontario, 1வது பதிப்பு, 2008. (கனடா: ரீ கொப்பி,

12363 – இளங்கதிர்: 34ஆவது ஆண்டு மலர் 2000-2001.

க.ஈசன், ச.ஜெகநாதன் (இதழாசிரியர்கள்). பேராதனை: தமிழ்ச்சங்கம், பேராதனைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 2001. (கொழும்பு 6: எஸ். பிரின்ட்). (13), 157 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21சமீ. ‘இளங்கதிர்” பேராதனைப் பல்கலைக்கழகத்

12570 – பேச்சுத் தமிழுக்கு அறிமுகம்.

எஸ்.ஜே.யோகராஜா. கொழும்பு 15: எஸ்.ஜே. யோகராஜா, 65ஃ322 காக்கை தீவு, மட்டக்குழி, 1வது பதிப்பு, டிசம்பர் 2009. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48டீ, புளுமெண்டால் வீதி). xvi, 146 பக்கம், விலை: ரூபா

14989 புதுவையாள்: பிரதேச பண்பாட்டு விழா மலர்: 2016.

வீ.பிரதீபன், இ.செல்வநாயகம் (மலராசிரியர்கள்). முல்லைத்தீவு: பிரதேச பண்பாட்டுப் பேரவை, பிரதேச செயலகம், புதுக்குடியிருப்பு, 1வது பதிப்பு, பெப்ரவரி 2016. ((வவுனியா: மல்ரிவிஷன் அச்சுக் கலையகம், குடியிருப்பு). viii, 197 பக்கம், புகைப்படங்கள், வண்ணத்தகடுகள், விளக்கப்படங்கள்,