12182 – ஸ்ரீ நவராத்திரி நாயகியும் தோத்திர மாலையும்.

ஸ்ரீ விசுவாம்பா விசாலாட்சி மாதாஜி. கொழும்பு: உலக சைவப் பேரவை, இலங்கைக் கிளை, 1வது பதிப்பு, மார்கழி 1999. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).

xiv, 96 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 22×14 சமீ.

இலகுவான செந்தமிழில் சுவை குன்றாது தோத்திர, பக்திப் பாடல்களை யாத்துத் தந்துள்ள நூலாசிரியர் சைவநன்மணி, சிவமயச் செல்வி, புலவர் ஸ்ரீ விசுவாம்பா விசாலாட்சி மாதாஜி, கொழும்பு, பேலியகொடை ஸ்ரீ பூபால விநாயகர் ஆலய ஆஸ்தானப் புலவராவார். இந்நூலின் முதற் பகுதி (பாகம் 1) வசன நடையில் ஏழு அத்தியாயங்களை உள்ளடக்குகின்றது. தாய் வழிபாடு, சக்தி வழிபாடும் சக்திகளின் தன்மையும், ஆதி பராசக்தியின் வலிமையின் பெருமை, ஸ்ரீமகாலட்சுமி தேவி, ஸ்ரீ தேவி பூசை, தேவி உபாசனை, நவராத்திரி விரதம் ஆகிய தலைப்புகளில் இவ்வத்தியாயங்கள் எழுதப்பட்டுள்ளன. இரண்டாவது பாகம் புலவர் ஸ்ரீ விசுவாம்பா விசாலாட்சி மாதாஜி தொகுத்தளித்துள்ள சக்தி தோத்திரச் செய்யுள் களைக் கொண்டுள்ளது. ஆசிரியரின் 67ஆவது வயதில் வெளிவந்துள்ள அவரது 18ஆவது நூல் இதுவாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 21185).

ஏனைய பதிவுகள்

How to Find Foreign Girls Online

Getting a international girlfriend is certainly an exciting issue for men, since it opens up their very own life to new choices. It may also

12977 – விடுதலைப் புலிகளும் சமாதான முயற்சிகளும்.

கரிகாலன் (தொகுப்பாசிரியர்), கு.பூபதி (பதிப்பாசிரியர்). சென்னை 600078: தோழமை வெளியீடு, எண் 10, ஆறாவது தெரு, முதல் பிரிவு, கே.கே.நகர், 1வது பதிப்பு, ஜுலை 2013. (அச்சக விபரம் தரப்படவில்லை). 375 பக்கம், விலை: