உஸ்தாத் எம்.ஏ.எம். மன்ஸுர். கொழும்பு 14: மீள்பார்வை வெளியீட்டுப் பணியகம், 63/5 ஊ, ஸ்டாஸ் வீதி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2001. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், 44, ஸ்டேஷன் வீதி).
(8), 120 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 21×14 சமீ., ISBN: 955-8226-02-5.
இஸ்லாமிய வரலாற்றிலே குர்ஆன் சம்பந்தமாக வெளிவந்த மிகவும் வித்தியாசமான தமிழ் நூல். குர்ஆனை எப்படி ஒரு அஜமி விளங்கிக்கொள்ளலாம் என்பவை சம்பந்தமாக பிரபல குர்ஆன் விரிவுரையாளர் உஸ்தாத் மன்ஸூர் அவர்கள் இங்கு தனது அனுபவத்தை அழகான மொழியில் பகிர்ந்து கொள்கிறார். ஆய்வுக்கான முற்குறிப்பு, அஜமி என்னும் சொற்பிரயோகமும் அறபு மொழியறிவும், அல்குர் ஆனும் நமது சமூகச் சூழலும், அல்குர் ஆனை விளங்குவதற்கான நிபந்தனை, அல்குர் ஆனின் வசீகரிக்கும் சக்தி, தனி எழுத்துக்களை விளங்கிக் கொள்ளல், அல்குர் ஆன் ஒரு தெய்வீக அற்புதம், குர் ஆனின் கலா உத்திகளும் உருவகங்களும், அல்குர் ஆனின் தனிப் பண்புகள், அல்குர் ஆன் முன்வைக்கும் சிந்தனைகள், முழுமைபெறாத விளக்கவுரைகளும் பிரமிக்கவைக்கும் வார்த்தைகளும், அல்குர் ஆனின் ஐந்து மையக் கருத்துக்கள், முடிவுரை ஆகிய 13 இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 21439).