ம.முகம்மது உவைஸ். சென்னை 1: யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், 155-156, அங்கப்ப நாயக்கன் தெரு, 1வது பதிப்பு, ஜுலை 1965. (சென்னை 1: யுனிவர்சல் பிரின்டிங் ஹவுஸ், 155-156, அங்கப்ப நாயக்கன் தெரு).
85 பக்கம், விலை: ரூபா 50., அளவு: 17.5×12.5 சமீ.
ம.முகம்மது உவைஸ் அவர்கள் வித்தியோதய பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றியவேளையில் எழுதிய நூல். சூபியாக்களின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு எழுந்தவை மஸ்தான் ஸாஹிபு பாடல்களாகும். இவை மெய்ஞ்ஞானத்தைக் கருவூலமாகக் கொண்டு உருப்பெற்று விளங்குகின்றன. பல தத்துவங்களைப் பொதுப்படையான குறிக்கோளுடன் போதிப்பதுடன் சித்தாந்தக் கருத்துக்களையும் ஆங்காங்கே கொண்டு இவை மிளிர்கின்றன. இத்தகைய சிறப்புமிக்க பாடல்களைப்பற்றி ஆராய்ச்சிக் கண்ணோட்டத்தில் எழுதிய ம.மு.உவைஸ் அவர்களின் கட்டுரைகள் தொடர்ச்சி யாகத் தினகரன் ஞாயிறு வாரமலரில் பிரசுரமாகியிருந்தன. அவற்றின் நூல்வடிவமே இதுவாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 23799).