M.S.M.முபாறக் (புனைபெயர்: மருதவாசி). மருதமுனை-3: மக்காமின் அமீன் பப்ளிக்கேஷன்ஸ், ஹிஜ்றா வீதி, 1வது பதிப்பு, பெப்ரவரி 2005. (அக்கரைப்பற்று-01: நியூ செலெக்ஷன் ஓப்செட் பிரின்ட்).
(2), 129 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 955-1109-2-3.
மனிதனின் ஆரம்பம், மனித ஜனனம், மனிதனும் கடவுள் நம்பிக்கையும், ஆஸ்திகர்களின் இறை நம்பிக்கை, கிறிஸ்தவம் கூறும் போதம், இந்துமத நம்பிக்கை, பௌத்த மதக் கொள்கை, சமணர்களின் நம்பிக்கை, யூதர்களின் கொள்கை, மானிக்கே சமயக் கொள்கை, சௌராஸ்ட்டிரிய மதக் கொள்கை, செவ்விந்தியர்களின் கடவுட்கொள்கை, தீயை வணங்குவோரின் (மஜுஸிகளின்) கொள்கை, தனி மனிதத் தத்துவவாதங்கள், இன்றைய மனிதனின் கேலிக்குரித்தான பண்டைய வேதங்களின் கூற்று, கடவுளைப் படைத்தது யார்?, வரலாற்றில் ஒரு சான்று, மானிடகோடியின் பொது நீதி வேதம் எது?, மனிதர்களின் மைதானம், மனிதனும் மதமும், மதம்பிடித்த மதங்கள், ஓ மனிதர்களே, சிறப்புமிகு சிந்தனையாளர்களின் நீதமான தெரிவு, முழுமனித சமுதாயத்தினுள்ளும் ஒளிவீசும் ஏகமனதாக அங்கீகாரம் பெற்ற ஒரேயொரு மாமனிதர் விருது, தேர்ந்தெடுப்பது மேலானதாகட்டும், யார் யாரோ எந்தெந்தப் பாதைகளில் பயணமோ என 26 இயல்களின் ஊடாக இஸ்லாமிய மத நம்பிக்கையின் முக்கியத்துவத்தை வெளிக்காட்டுவதாக இந் நூல் அமைகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 46858).