முகாமைத்துவமும். மவ்லவி A.S.A.முத்தலிப். இப்பாகமுவ: மௌலவி முத்தலிப், Mujeeb Islamic Library, 56, ரத்மல்வத்த, பாங்கொல்ல வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 1998. (இப்பாகமுவ: ஷோபா கிராப்பிக்ஸ்).
(10), 105 பக்கம், விலை: ரூபா 60.00, அளவு: 20.5×14 சமீ.
இரண்டு பகுதிகளில் எழுதப்பெற்றுள்ள இந்நூலின் முதற் பகுதியில் முஹம்மத் அவர்களின் தனித்துவ மேம்பாடுகளை ஒப்பீடுகள் மற்றும் அறிஞர்களின் கருத்துக்களின் துணையோடு எடுத்தக்கூற முயல்கின்றார். இப்பிரிவில் புகழுக்குரிய இறைதூதர், முஹம்மத் எங்களைப் போன்ற ஒரு மனிதரா?, சர்வஞானக் களஞ்சியம், அரசியல்வானில் ஓர் உதயசூரியன், பக்தர்களும் எதிரிகளும், நபிமார்களின் போதனைகள் ஆன்மீக சிந்தனைகள், ஆராய்தல் தெளிதல், பின்பற்றுதல் ஆகிய தலைப்புகளில் இவை விபரிக்கப்பட்டுள்ளன. இரண்டாம் பிரிவில் முஹம்மத் அவர்களது தலைமைத்துவ முகாமைத்துவ நுட்பங்களை, முஹம்மத் அவர்களின் தலைமைத்துவ முகாமைத்துவ நுட்பங்கள், வழிமுறைகள், முன்மாதிரிகள் ஆகிய மூன்று தலைப்புகளில் விபரித்துள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 21063).