12194 – ஸலவாத்துன் நபி.

எம்.ஏ.ஸெய்யித் முஹம்மத். காத்தான்குடி 3: ஸலவாத் மஜ்லிஸ், இஸ்மாயில் ஹாஜியார் ஒழுங்கை, 1வது பதிப்பு, ஜனவரி 1994. (மட்டக்களப்பு: ஆனந்தா அச்சகம்).

58 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மீது கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்துவதற்கு அல்லாஹ் தந்துள்ள வழிமுறையாக ஸலவாத் ஓதல் இஸ்லாமியரிடையே கருதப்படுகின்றது. அதுதான் அவர்களுக்காக அல்லாஹ்விடம் அருளை வேண்டக் கூடிய ஸலவாத். இந்த நபிமொழி நமக்கு ஒரு உண்மையைத் தெளிவாக்குகின்றது. நபி(ஸல்) அவர்களைப் புகழ்கிறேன் என்று திருவிழாக்கள் கொண்டாடுவதோ, பாடல்கள் பாடிக் கொண்டிருப்பதோ நபி(ஸல்) அவர்களின் மீது நாம் கொண்ட அன்புக்கு சரியான அடையாளமாகாது. மாறாக அவர்களுக்காக அல்லாஹ்விடம் ‘ஸலவாத்’ எனும் துஆவைச் செய்வதுதான் உண்மையான அன்பாகும் என்பதைக் கருத்திற்கொண்டு இந்நூலிலே ஸலவாத் ஓதும் பலாபலன்களை முதலில் விளக்கி, தீனுல் இஸ்லாம், றமழானின் மகத்துவம், புனித நோன்பு, பெருமானாரின் சிறப்புகள், முஹர்றத்தில் மிளிரும் ஆசூறா, தௌபா இறைஞ்சிய நபிஆதம் (அலை), தீக்கிடங்கில் நபி இப்றாகீம் (அலை), கடலிலே நடந்த நபிமூஸா (அலை), பிரளயத்தில் பிழைத்த நபிநூஹ் (அலை), மீன் வயிற்றிலிருந்து மீண்ட நபியூனூஸ் (அலை), கர்பலாவில் ஸஹீதாகிய இமாம் ஹுசைன் (றலி) ஆகிய அதிசயங்களை வியந்துபோற்றும் ஸலவாத்துக்களை ஆசிரியர் இந்நூல்வழியாக விளக்குகின்றார். இறுதி அத்தியாயமாக, ஸலவாத்தின் சிறப்பு என்ற கட்டுரையும் இந்நூலில் ஸலவாத் பற்றிய விளக்கமளிப்பதற்காகச் சேர்க்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 14753).

மேலும் பார்க்க: 13A01,12002,12512,12853,12855,12856 297

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

ஏனைய பதிவுகள்