12196 – சமாதானத்தின் மகிமை.

ஜெயதேவ உயன்கொட, அனுஷா தல்பாவெல (ஆங்கில மூல தொகுப்பாசிரியர்கள்), அ.ஜெயரத்தினம் (தமிழாக்கம்). கொழும்பு 7: நீலன் திருச்செல்வம் நம்பிக்கையாளர் நிறுவனம், 108/1, ரோஸ்மீட் பிளேஸ், இணை வெளியீட்டாளர், கொழும்பு 8: இனத்துவ ஆய்வுகளுக்கான சர்வதேச நிலையம், இல. 2, கின்சி ரெறஸ், 1வது பதிப்பு, 1999. (கொழும்பு 13: ஈ-குவாலிட்டி கிராப்பிக்ஸ், 315, ஜம்பெட்டா வீதி).

x, 111 பக்கம், புகைப்படம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ.

புத்த மதமும் அகிம்சையும் (கென்னத் கிராப்ட்), புத்த பகவானின் போதனைகளும் இன்றைய உலகும் (வண.வல்பொல ராகுலர்), அகிம்சைப் போராட்டம் ஒரு செயற்திறன் மிக்க மாற்றுவழி (யீன் சார்ப்), அகிம்சை (மகாத்மா காந்தி), கம்போடியாவில் சமாதானத்தை நோக்கிய மெதுவான பயணம் (வண.கிம் டெங் நெம்), சமாதானத்தை அறிந்து கொள்ளுதல் (எலிஸ் போல்டிங்), முரண்பாட்டுக்குப் பிந்திய சமாதான உருவாக்கம் (பூட்ரஸ் பூட்ரஸ் காலி), மீள் நல்லிணக்கம்: உறவைக் கட்டிவளர்த்தல் (ஜோன் போல் லெடராக்), அகிம்சை பற்றிய ஒரு கட்டுரை (திலீப் சிமியோன்), சமாதானமும் வாழ்வின் புனிதமும் (நீலன் திருச்செல்வம்) ஆகிய கட்டுரைகளின் தொகுப்பு இது. இலங்கையில் முன்னணி சமாதான மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளரான நீலன் திருச்செல்வத்தின் நினைவாக இந்நூல் வெளிவந்துள்ளது. நீலன் திருச்செல்வம் (ஜனவரி 31, 1944- ஜுலை 29, 1999) ஒரு மிதவாத, ஆற்றல் மிகுந்த, அரச சட்டமைப்பு பற்றிய புலமைமிக்க, சர்வதேச மதிப்பினைப் பெற்ற இலங்கைத் தமிழ் அரசியல்வாதியாவார். இவரே இலங்கையில் கொள்கை பற்றிய முன்னணி ஆய்வு நிறுவன அமைப்புகளின் (Centre for Ethnic Studies, Law Society Trust) அமைப்பாளர்களில் ஒருவராக இருந்தவர். நீலன் திருச்செல்வம் ஜூலை 29, 1999 அன்று அடையாளம் காணப்படாத தற்கொலைக் குண்டுதாரி ஒருவரால் படுகொலை செய்யப்பட்டார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 39486. நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தின் சேர்க்கை இலக்கம் 018989).

ஏனைய பதிவுகள்