12197 – ந.சி.க.முகவுரைகள்.

ந.சி.கந்தையாபிள்ளை (மூலம்), கி.குணத்தொகையன் (தொகுப்பாசிரியர்). சென்னை 601302: ப‡றுளி பதிப்பகம், 1/561, பாவலரேறு தெரு, பாவாணர் நகர், மேடவாக்கம், 1வது பதிப்பு, 2004. (சென்னை 6: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்ஸ், ஆயிரம் விளக்கு).

vi, 90 பக்கம், விலை: இந்திய ரூபா 60., அளவு: 21.5×14 சமீ.

ஈழத்தமிழறிஞர் ந.சி.கந்தையாபிள்ளை அவர்கள் எழுதிய 60 நூல்களின் முன்னுரைகளைத் தொகுத்து இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பதிற்றுப்பத்து வசனம், பத்துப்பாட்டு உரைநடை, பரிபாடல் உரை, கலித்தொகை உரை, அகநானூறு வசனம், புறப்பொருள் விளக்கம், கலிங்கத்துப் பரணி வசனம், விறலிவிடு தூது வசனம், பெண்கள் புரட்சி, பெண்களும் சமூகமும் அன்றும் இன்றும், பெண்கள் உலகம், உங்களுக்குத் தெரியுமா? பொது அறிவு, பொது அறிவு வினா-விடை, நூலகங்கள், அறிவுக் கட்டுரைகள், அறிவுரை மாலை, அறிவுரைக் கோவை, தமிழர் சமயம் எது?, சைவ சமய வரலாறு, இந்து சமய வரலாறு, சிவன், தமிழர் பண்பாடு, தமிழ்-பழமையும் புதுமையும், முச்சங்கம், நமது தாய்மொழி, திராவிட மொழிகளும் இந்தியும், நமது மொழி, நமது நாடு, ஆரியர் தமிழர் கலப்பு, ஆரியத்தால் விளைந்த கேடு, புரோகிதர் ஆட்சி, இராமாயணம் நடந்த கதையா?, ஆரியவேதங்கள், தமிழ்க் கடவுளுக்கு ஆரியப் பாடலா?, திராவிட நாகரீகம், திராவிடம் என்றால் என்ன?, மறைந்த நாகரிகங்கள், திராவிட இந்தியா, பாம்பு வணக்கம், ஆதி மனிதன், ஆதி உயிர்கள், மரணத்தின் பின், மனிதன் எப்படித் தோன்றினான்?, தமிழர் யார், சிந்துவெளித் தமிழர், உலக நாகரிகத்தில் தமிழர் பங்கு, தென்னிந்திய குலங்களும் குடிகளும், தமிழர் சரித்திரம், வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந்தமிழர், திருவள்ளுவர், திருக்குறள், திருக்குறள் அகராதி, தமிழ்ப் புலவர் அகராதி, தமிழ் இலக்கிய அகராதி, காலக்குறிப்பு அகராதி, அகத்தியர், தமிழ் ஆராய்ச்சி, நீதிநெறி விளக்கம் ஆகிய நூல்களின் முன்னுரைகளும் தமிழ் சான்றோரின் மதிப்புரைகள் என்ற இறுதி இயலில் மா.இராசமாணிக்கம், நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர், கே.சுப்பிரமணிய பிள்ளை ஆகியோரின் மதிப்புரைகளும் இந்நூலில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்