மனிதநேய அமைப்புக்களின் கூட்டமைப்பு. கொழும்பு 7: மனிதநேய அமைப்புக்களின் கூட்டமைப்பு, இல. 86, றொஸ்மீட் பிளேஸ், 3வது பதிப்பு, 2011, 1வது பதிப்பு, 2000, 2வது பதிப்பு, 2004. (அச்சக விபரம் தரப்படவில்லை).
vi, 441 பக்கம், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-1041-46-5.
பல மனிதநேய அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் செஞ்சிலுவைச் சங்கங்களினால் 1997ஆம் ஆண்டு ஸ்பியர் (ளுphநசந) திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் உலக சமுதாயம் பிரதிபலிக்க வேண்டிய தரங்களை வரையறுப்பதற்கும் மற்றும் தீர்மானிப்பதற்குமான ஒரு முயற்சியாக ஸ்பியர் திட்டம் காணப்படுகின்றது. இந்தக் கையேட்டின் மூலம், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களும் தமது வாழ்க்கையையும், வாழ்வாதாரங்களையும் மீளக்கட்டியெழுப்புவதற்கான உரிமை அங்கீகரிக்கப்பட்டும், அவர்களின் குரல் மதிக்கப்பட்டும், அவர்களுடைய கௌரவமும் பாதுகாப்பும் மேம்படுத்தப்படும் வகையில் செயற்படும் ஓர் உலகத்தை உருவாக்கும் நோக்குடன் செயற்பட முயற்சிக்கப்படுகின்றது. இக்கையேட்டில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளைப் பிரதிபலிக்கும் சட்ட மற்றும் ஒழுக்கக் கோட்பாடுகள்-மனிதநேய சாசனமாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்புக் கோட்பாடுகள், நான்கு பிரதான வாழ்க்கையைக் காப்பாற்றும் மனிதநேயத் துறைகளில் மிக முக்கியமான தரங்கள் மற்றும் அடிப்படைத் தரங்கள் (நீர் விநியோகம், தேகாரோக்கியம் மற்றும் போஷாக்கு மேம்பாடு: உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கு: உறைவிடம், குடியிருப்பு மற்றும் உணவல்லாத விடயங்கள்: சுகாதார நடவடிக்கை என்பன) பற்றிய முன்மொழிவுகள் இடம்பெற்றுள்ளன. மேலும் பார்க்க: 12187,12319