எம்.சீ. த சில்வா, பத்மினீ என்.பெரேரா, ரஞ்சினி சேனாநாயக்க (பதிப்பாசிரியர்கள்), ஐ.தம்பிமுத்து (மொழிபெயர்ப்பாளர்). கொழும்பு 10: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், 6வது பதிப்பு, 1992, 1வது பதிப்பு, 1987. (அம்பலாங்கொடை: மஹிந்த பிரின்டர்ஸ், இல. 341 அல்பிட்டிய வீதி, வத்துகெதர).
vii, 144 பக்கம், வரைபடங்கள், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ.
பதினொராம் தரத்திற்கான புதிய பாடத்திட்டத்துக்கமைய எழுதப்பட்ட சமூகக் கல்வி சார்ந்த நூல். வளங்கள், பொருளாதார முறைகள், அபிவிருத்தி, அபிவிருத்தி யடைந்த நாடுகளினதும் அபிவிருத்தி அடைந்து வருகின்ற நாடுகளினதும் பின்னணி, அபிவிருத்தி சம்பந்தமான பிரச்சினைகள், அபிவிருத்திக்குரிய வழிவகைகள், சர்வதேசத் தாபனங்கள், அபிவிருத்தியடைந்துவரும் இலங்கை, இலங்கையின் அபிவிருத்தியின் புதிய போக்கு, மனித உரிமைகளைப் பாதுகாத்தல் ஆகிய 10 பாடங்களுக்கான அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 17688).