12206 – மாணவர் சூழல் வாசகம்: இரண்டாம் வகுப்பு.

க.சி.குலரத்தினம். யாழ்ப்பாணம்: ஆறுமுகம் சுப்பிரமணியம், ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 235, காங்கேசன்துறை வீதி, 2வது பதிப்பு, 1972, 1வது பதிப்பு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய அச்சகம், 400, காங்கேசன்துறை வீதி).

(6), 110 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 1.50, அளவு: 19.5×16 சமீ.

சூழல் பாடம், சமூகக் கலை, சமுதாய பாடம் ஆகிய பெயர்களுடைய பாடத்தைக் கற்பதன்மூலம் மாணவர்கள் தமது சுற்றாடலை, நன்கு அறிந்துகொள்கின்றனர். இந்நூல் ஒரு இரண்டாம் வகுப்பு மாணவனின் அறிவு விருத்திக்கு ஏற்ப அடிப்படை சமூகவியல் அறிவை வழங்குகின்றது. வித்தியா பகுதியாரின் புதிய பாடவிதானத்திற்கு அமைய எழுதப்பட்டுக் கல்வி அமைச்சின் 178ஆம் இலக்கச் சுற்றுநிருபத்துக்கு அமையத் திருத்தி எழுதப்பட்டது. எங்கள்நாடு, தமிழர், சிங்களவர், முஸ்லீம்கள், வேடர், இந்தியத் தமிழர், எஸ்கிமோஸ் சாதியினர், செவ்விந்தியர், பிக்மீஸ் சாதியினர், அராபியர், சுவிட்சர்லாந்து மக்கள், யப்பானியர், அமெரிக்கர் ஐரோப்பியர், தொழில்கள், கமஞ்செய்வோர், உழவர் வாழ்க, மட்பாண்டஞ் செய்வோர், மரவேலை செய்வோர், இரும்புவேலை செய்வோர், வியாபாரஞ் செய்வோர், மீன்பிடிப்போர், ஆசிரியர், வைத்தியர், பொலிசுக்காரர், தபாற்காரர், எமது வீடு, எழுத்தின் கதை, நெருப்பின் கதை, வண்டி வாகனம், நமது ஆடைகள், இலங்கையின் பழைய நகரங்கள், நாகரீகம் வாய்ந்த நாடுகள், எங்கள் அரசாங்கம், நல்ல பிள்ளை, மரியாதைப் பழக்கம், நல்லன செய், நல்ல பழக்கம், நல்ல ஒழுக்கம், சுகாதாரப் பழக்கம், சகவாழ்வு, தேகாப்பியாசமும் நித்திரையும், குதிரை, கழுதை, எருமை, யானை, அணில், வெளவால், ஆந்தை, மரங்கொத்தி, வாத்து, மீன்கொத்திக் குருவி, வண்ணாத்திப் பூச்சி, தேனீக்கள், இயற்கையின் அற்புதம், பாட்டுப்பாடுவோம், தாவரம், மாமரம், பலாமரம், நீரில் உண்டாகும் கொடிகள் ஆகிய தலைப்புகளில் பாடங்கள் ஒன்பது தொகுதிகளாகப் பிரித்துத் தரப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2254).

ஏனைய பதிவுகள்