க.சண்முகலிங்கம் (ஆசிரியர்). கொழும்பு 5: சமூக விஞ்ஞானிகள் சங்கம், 12, சுலைமான் ரெறஸ், 1வது பதிப்பு, ஏப்ரல் 2011. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
128 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21×14.5 சமீ., ISSN: 1391-7269.
கொழும்பு, சமூக விஞ்ஞானிகள் சங்கத்தின் ஆய்வேடாக ஜனவரி 2002 முதல் வருடமிருமுறை வெளிவந்த ‘பிரவாதம்’ இதழ் சிலகாலம் தடைப்பட்டிருந்து மீண்டும் 2005இல் நான்காவது இதழாக வெளிவந்தது. மீண்டும் ஆறு ஆண்டு இடைவேளையின் பின்னர் ஏப்ரல் 2011 முதல் தொடரும் இவ்விதழின் ஐந்தாவது இதழ் இது. ஆசிரியர் குழுவில் எம்.ஏ.நு‡மான், செல்வி திருச்சந்திரன், என். சண்முகரத்தினம், சித்திரலேகா மௌனகுரு ஆகியோர் பணியாற்றினர். வரலாறும் வரலாறு எழுத்தியலும் (க.சண்முகலிங்கம்), வரலாற்றின் உருவாக்கத்தில் சமூகமும் தனிநபரும் (ஈ.எச்.கார்), வரலாற்று ஆசிரியரும் வரலாற்று ஆதாரங்களும்: ஈ.எச். கார் நோக்கில் அனுபவவாதமும் அகவாதமும் (க.சண்முகலிங்கம்), சமூக வரலாறும் வரலாற்றில் தனிநபரின் வகிபாகமும் (ரிச்சர்ட் ஜே.இவன்ஸ்), வரலாறு என்றால் என்ன? (ஆ.இரா.வேங்கடாசலபதி), வரலாறுகளும் அடையாளங்களும் (ரொமிலா தாப்பர்), முதிர்ச்சியுறாத கிளர்ச்சியாளர்கள் (குமாரி ஜெயவர்த்தன), இந்திய நிலமானிய முறை (ஆர்.எஸ்.சர்மா), நூல் அறிமுகம் (சனங்களும் வரலாறும், Early Historic Tamil Nadu), அஞ்சலி: பேராசிரியர் லெஸ்லி குணவர்த்தன ஆகிய ஆக்கங்கள் இவ்விதழில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 51623).