12209 – பிரவாதம் இதழ்எண் 6: ஜுலை 2011.

க.சண்முகலிங்கம் (ஆசிரியர்). கொழும்பு 5: சமூக விஞ்ஞானிகள் சங்கம், 12, சுலைமான் ரெறஸ், 1வது பதிப்பு, ஜனவரி 2012. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

v, 120 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21.5×14.5 சமீ., ISSN: 1391-7269.

பிரவாதம் ஆறாவது இதழின் கட்டுரைகளாக ‘ஆராய்ச்சி முறையியல்’ (ஜெயதேவ உயன்கொட), ‘சமூக விஞ்ஞான ஆராய்ச்சி முறையியல்: நேர்க்காட்சிவாதமும், மக்ஸ்வெபரின் விளக்கமுறைச் சமூகவியலும்’ (க.சண்முகலிங்கம்), ‘விஞ்ஞானத்தின் மெய்யியல்: கால் பொப்பரும் தோமஸ் கூனும்’ (சோ.கிருஷ்ணராஜா), ‘பூர்வகாலத் தமிழ்நாட்டில் அரசமைப்பு உருவாக்கம்’ (கா.சிவத்தம்பி), ‘உயிர்ப்பு நிலை: பேராசிரியர் சிவத்தம்பி கண்டறிந்த தமிழ்க் கல்வி’ (வீ.அரசு), ‘நூல் அறிமுகம் Writing Research Proposals in the Social Sciences and Humanities’, ‘அஞ்சலி -பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி’ ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. இவ்விதழின் ஆசிரியர் குழுவில் எம்.ஏ.நு‡மான், செல்வி திருச்சந்திரன், என்.சண்முகரத்தினம், சித்திரலேகா மௌனகுரு ஆகியோர் பணியாற்றியுள்ளனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 51630).

ஏனைய பதிவுகள்

14904 திருவாசகம் ஸ்ரீசபாரத்தினம் சுவாமிகள் நினைவு மலர்.

த.துரைராசா (தொகுப்பாசிரியர்). கொழும்பு 13: ஸ்ரீசபாரத்தினம் சுவாமிகள் தொண்டர் சபை, 5ஆவது ஆண்டு குருபூசை நினைவு வெளியீடு, 1வது பதிப்பு, ஜனவரி 1993. (கொழும்பு 13: லக்ஷ்மி அச்சகம், 195, ஆட்டுப்பட்டித் தெரு). (28)

12154 – தெய்வீகம் மலரும் பொழுது.

மு.க.சிவபாதவிருதயர். வவுனியா: பகவான் ஸ்ரீ சத்யசாயி சேவா நிலையம், சாந்தம், பிரசாந்தி வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 2007. (யாழ்ப்பாணம்: கரிகணன் தனியார் நிறுவனம், இல. 424, காங்கேசன்துறை வீதி). (4), 181 பக்கம்,

12870 – மக்கள் இனங்கள்.

எச்.ஜே.புளூவர் (ஆங்கில மூலம்), ச.சரவணமுத்து (தமிழாக்கம்). கொழும்பு 7: வெளியீட்டுப் பிரிவு, அரச கரும மொழித் திணைக்களம், 1வது பதிப்பு, 1964. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகம்). (6), 69 பக்கம், அட்டவணைகள், விலை:

13002 சி++ மொழி (முதல் பதிப்பு)

ந.செல்வகுமார். யாழ்ப்பாணம்: கணினிக் கல்வி நிலையம், 100, மணிக்கூட்டு வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2003. (அச்சக விபரம் தரப்படவில்லை).x, 218 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21×14 சமீ., ISBN: 955-97996-0-6.

14880 வாழகம், பொருளாதாரம், சமூகம்.

சீ. டரில் போட் (ஆங்கில மூலம்). கொழும்பு 3: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், “சிறிமதி பாயா”, 58, சேர் ஏர்னெஸ்ட் த சில்வா வீதி, 1வது பதிப்பு, 1967. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகம்).