12210 – பிரவாதம் இதழ்எண் 7: ஒக்டோபர் 2011.

க.சண்முகலிங்கம் (ஆசிரியர்). கொழும்பு 5: சமூக விஞ்ஞானிகள் சங்கம், 12, சுலைமான் ரெறஸ், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2011. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

122 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21.5×14.5 சமீ., ISSN: 1391-7269.

மீண்டும் ஒரு இடைவேளையின் பின்னர் 5ஆவது இதழிலிருந்து (ஏப்ரல் 2011) தொடரும் பிரவாதம் சமூக ஆய்வேட்டின் ஏழாவது இதழ் இது. ஆசிரியர் குழுவில் எம்.ஏ.நுஃமான், செல்வி திருச்சந்திரன், என்.சண்முகரத்தினம், சித்திரலேகா மௌனகுரு ஆகியோர் பணியாற்றினர். கொழும்புத் தமிழ் முதலாளித்துவத்தின் உருவாக்கம் (குமாரி ஜயவர்த்தனா), சார்பு மண்டல முதலாளித்துவமும் பழைய உற்பத்தி உறவுகளை மீள உயிர்ப்பித்தலும் (நியூடன் குணசிங்க), இலங்கையின் கிராமப்புறங்களில் அரசியலும் மாற்றமும் பற்றிய ஆய்வு: ஜொனதன் ஸ்பென்சரின் நூலின் அறிமுகம் (க.சண்முகலிங்கம்), நூல் அறிமுகம்: இலங்கையில் இனத்துவமும் சமூக மாற்றமும் (ஹரன்), அஞ்சலி: ஆர்.எஸ்.சர்மா 1920-2011 (ரோமிலா தாப்பர், சுவீரா ஜயஸ்வால், டி.என்.ஜா) ஆகிய ஆக்கங்கள் இவ்விதழில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 59847).

ஏனைய பதிவுகள்