க.சண்முகலிங்கம் (ஆசிரியர்). கொழும்பு 5: சமூக விஞ்ஞானிகள் சங்கம், 12, சுலைமான் ரெறஸ், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2012. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
147 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21.5×14.5 சமீ., ISSN: 1391-7269.
இவ்விதழின் ஆசிரியர் குழுவில் எம்.ஏ.நு‡மான், செல்வி திருச்சந்திரன், என். சண்முகரத்தினம், சித்திரலேகா மௌனகுரு ஆகியோர் பணியாற்றியுள்ளனர். இவ்விதழில் இலங்கையில் பின்காலனித்துவ அரசு: மாற்றத்தின் வழித்தடங்கள் (ஜயதேவ உயங்கொட), அந்தொனியோ கிராம்ஸ்கி: ஒரு சுருக்க அறிமுகம் (நியூட்டன் குணசிங்க), அரசியல் மூலதனமும் குடும்ப சாம்ராஜ்ஜிய அரசியலும் (குமாரி ஜயவர்த்தன), தமிழில் கலைச்சொல் பேரகராதி (உலோ. செந்தமிழ்க் கோதை), நூல் அறிமுகம்: அடம் ஸ்மித் முதல் கார்ள் மார்க்ஸ் வரை: செவ்வியல் அரசியல் பொருளாதாரம் ஆகிய ஆக்கங்கள் இவ்விதழில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 59882).
மேலும் பார்க்க: 12832