ஆனந்த W.P.குருகே (பதிப்பாசிரியர்), எஸ்.நடராஜ ஐயர் (மொழிபெயர்ப்பும் தொகுப்பும்). கொழும்பு: பிரதிப் பணிப்பாளர் நாயகம், மத்திய கலாசார நிதியம், கலாசார மத விவகார அமைச்சு, 1வது பதிப்பு, 1997. (மகரகம: தரஞ்ஜீ பிரின்ற்ஸ், 506, ஹைலெவல் வீதி, நாவின்ன).
xii, 400 பக்கம், விலை: ரூபா 290, அளவு: 24×18.5 சமீ.
வரண்ட வலயத்தில் புத்த மதத்தின் தோற்றம் (மென்டிஸ் ரோஹணதீர), குளங்களும் நீர்ப்பாசனமும் (அனுராதா செனவிரத்ன), பொலந்நறுவ காலத்திற் கட்டிட நிர்மாணம் (H.T.பஸநாயக்க), செதுக்குவேலைக் கலை (சிரிநிமல் லக்துசிங்க), பீடங்களுக்கிடையிலான ஒற்றுமையும் சம்பிரதாயங்களும் (மென்டிஸ் ரோஹணதீர), பௌத்த மதமும் விகாரைக் காணிகள் பற்றிய பிரித்தானிய ஆட்சியின் கருத்துக்களும் பலாபலன்களும் (H.D.G.விமலரத்ன), குடியேற்ற ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட தேசிய மறுமலர்ச்சி (K.N.O. தர்மதாச), ராஜதந்திரம் (மங்கள இலங்கசிங்க), வெலிவிட்ட சரணங்கர சங்கராஜயுகம் (வினி விதாரண), புத்தர் உருவச் சிலை (சந்திரா விக்கிரம கமகே), அபயகிரி தாதுகோபுரமும் விகாரைகள் கட்டிடத் தொகுதியும் (T.G.குலத்துங்க), வரலாற்றுப் பின்னணி (ஆனந்த W.P.குருகே), ஜேத்தவனராம பாரம்பரியம் (சந்திரா விக்கிரம கமகே), பௌத்த மதத்திற்கு இலங்கை ஆற்றிய சேவை (ஆனந்த W.P.குருகே), தாதுகோபுரங்களின் நிர்மாணம் (P.I.பிரேமதிலக்க), பொதுமக்களின் சமயரீதியிலான சிந்தனை (H.A.P.அபயவர்த்தன), இலங்கையின் தர்ம விவரணங்களும் ஏனைய சமயங்களின் அறிவும் (சுமனபால கல்மங்கொட), ஏட்டுக் கல்வி நிலையங்கள்அல்லது ஏட்டுக் ‘குறிக்கோள் கட்டிடங்கள்’; (விமல் ஜீ. பலகல்ல), பௌத்தக் கல்வியின் வளர்ச்சியும் தற்போதைய நிலையும் (ஏ.அதிகாரி), அபயகிரி பாரம்பரியம் (சந்திரா விக்ரம கமகே), மகாவிகாரையின் பாரம்பரியம் (விமல விஜயசூரிய), தம்பதெனிய யுகத்திலிருந்து கோட்டே யுகம்வரை-கட்டிடக்கலை (நந்தசேன முதியான்சே), தாதுகோபுரம் (செனரத் பரணவிதான), சிங்கள மொழியின் தோற்றமும் அபிவிருத்தியும் (விமல் ஜீ. பலகல்ல), கண்டி யுகத்திலான கட்டிடக்கலை (நிமல் டி சில்வா), விழாக்களும் விளையாட்டுக்களும் (வினி விதாரண), சமஸ்கிருத இலக்கியம்-வளர்ச்சியும் ஆதிக்கமும் (ஆனந்த W.P.குருகே), சிங்கள எழுத்துக் கலையினதும் இலக்கியத்தினதும் ஆரம்பகாலம் (பந்துசேன குணசேகர), சிங்கள இலக்கியத்தின் மரபு வரலாறும் சிங்கள இலக்கியமும் (ஏ.வீ.சுரவீர), சிங்கள இலக்கியம்- அனுராதபுரக் காலம் (ஏ.வீ.சுரவீர), ஜேத்தவன தூபியும் ஆச்சிரமத் தொகுதியும் (ஹேம ரத்நாயக்க), வாத்தியங்களும் நடனக்கலையும் (திஸ்ஸ காரியவாசம்), சமூக நியமம் (சந்திம விஜயபண்டார) ஆகிய 33 ஆய்வுக் கட்டுரைகளை இத்தொகுதி உள்ளடக்குகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 48477. நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தின் சேர்க்கை இலக்கம் 008884).