12219 – புள்ளிவிபரப் படவரைகலையியல்.

க.குணராசா. யாழ்ப்பாணம்: கமலம் பதிப்பகம், 1, முதலாம் ஒழுங்கை, பிரவுண் வீதி, திருத்திய 3வது பதிப்பு, ஏப்ரல் 2004, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1994. (யாழ்ப்பாணம்: ராம் பிறின்ரேர்ஸ் கிராப்பிக்ஸ், பலாலி வீதி).

(6), 7-243 பக்கங்கள், வரைபடங்கள், அட்டவணைகள், விலை: ரூபா 250., அளவு: 20×14 சமீ.

இந்நூலில் ஏழு பகுதிகளும் 29 அத்தியாயங்களும் உள்ளன. பார் வரைப்படங்கள் (சாதாரண பார் வரைப்படம், வீத பார் வரைப்படம், கூட்டு பார் வரைப்படம், கூம்பக பார் வரைப்படம், நிரல் வரைப்படம்), சில்லு விளக்கப்படங்கள் (பிரிக்கப்பட்ட வட்டங்கள், விகித சம வட்டங்களும் உள்ளமைந்த வட்டங்களும்), கோட்டு வரைப்படங்கள் (கோட்டு வரைப்படங்கள், சராசரி விலகல் வரைப்படம், நியம விலகல் வரைப்படம், நகரும் சராசரி விலகல் வரைப்படம், லொறன்ஸ் வளையி, ண-வரையம், திரள்கோட்டு வரையம்), மீடிறன் வரைப்படங்கள் (இழை வரையம், மீடிறன் பல்கோணியும் ஓராய வளையிகளும், திரட்டு மீடிறன் வளையி, ஓகைவ் வளையிகள்), காலநில வரைப்படங்கள் (கொட்டு நிரல் வரைப்படம், காலநிலை வளையி, மணிக்கூட்டு வரையம், கிளைமோ வரையம், ஹைதர் வளையி), சிதறல் வரைப்படங்கள் (பிரிக்கை வரைப்படங்கள், இருமாறிகள் வரையம் /சிதறல் வரைப்படம், முக்கூட்டு வரையம்), சமயகணிய/இடக்கணியப் படங்கள் நிழற்றுமுறை வரைப்படங்கள், புள்ளிமுறை வரைப்படங்கள், இடக்கணிய பை வரைப்படம்) ஆகிய ஏழு பகுதிகளாக இவை பிரித்து விளக்கப்பட்டுள்ளன. புள்ளி விபர வரைப்படங்களைத் தெளிவாக விளக்கும் 216 விளக்கப்படங்களும் இந்நூலில் உள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 36006).

ஏனைய பதிவுகள்