12220 – அரசறிவியலாளன் (இதழ் 2, டிசம்பர் 2007).

ஜெ.கவிதா. யாழ்ப்பாணம்: அரசறிவியல் ஒன்றியம், அரசறிவியல் துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, டிசம்பர் 2007. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ் பிறின்டர்ஸ், 15/2B, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்).

xii, 134 பக்கம், வண்ணத் தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.

இலங்கையின் அடிப்படை உரிமைகள் எதிர்நோக்கும் சவால்களும் பிரச்சினைகளும் (சி.திருச்செந்தூரன்), இலங்கையின் முரண்பாட்டு அரசியல் கலாசாரம் (இரா. பிரமாலட்சுமி), தென்னாசிய நாடுகளின் அரசியலில் மதம் வகிக்கும் பங்கு (சு.துஷாலினி), பொதுத்துறை நிர்வாகத்தின் தோற்றமும் வளர்ச்சியும் (T.தவகர்ணன்), பணியகவமைப்பு (V.சுதர்சனா), அமெரிக்க அரசாங்க முறைமை: ஒரு கண்ணோட்டம் (S.கிரிஜா), அமெரிக்க அரசாங்க முறைமையில் வலுவேறாக்கத் தத்துவம் (C.சந்திரிகா), வட-அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (L.F.ஜெரால்டீன்), உலக வர்த்தக நிறுவனத்தின் அரசியல் பொருளாதாரம் (R.ராஜரஜிதினி), பொதுஜன அபிப்பிராயமும் அதை உருவாக்கும் சாதனங்களும் (B.கிருஷ்ணவேணி), தென்னாசிய நாடுகள் எதிர்நோக்கும் சவால்களும் இந்தியாவின் வளர்ச்சியும் (K.T.கணேசலிங்கம்), உள்ளுராட்சி அரசாங்க முறைமை: ஒரு மீள்நோக்கு (அ.வே. மணிவாசகர்) ஆகிய அரசியல்துறைசார் ஆய்வுக் கட்டுரைகள் இவ்வாண்டிதழில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்