12236 – இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு.

தோழர் பாலன். லண்டன்: தோழர் பதிப்பகம், 1வது பதிப்பு, ஜுன் 2016. (அச்சக விபரம் தரப்படவில்லை).

(4), 58 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 25.00, அளவு: 21.5×13.5 சமீ.

இலங்கை மீதான இந்திய அரசின் திட்டமிட்ட ஆக்கிரமிப்பினை இந்நூல் இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு, இலங்கை அரசியலில் இந்தியாவின் தலையீடு, இலங்கையில் இந்தியாவின் பொருளாதார ரீதியிலான தலையீடு, இலங்கையில் இந்தியாவின் இராணுவத் தலையீடு, இந்திய ஆக்கிரமிப்பில் இருந்து விடுபடுவது எப்படி? ஆகிய ஐந்து இயல்களில் விளக்குகின்றது. இந்நூலாசிரியர் தோழர் பாலன் இலங்கையில் கரவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தற்போது லண்டனில் வாழ்ந்து வருகின்றார். இவர் தமிழ் மக்கள் பாதுகாப்பு பேரவை என்னும் புரட்சிகர இயக்கத்தின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவர். அதன் செயற்குழு உறுப்பினர்களுள் ஒருவராகவும் இயங்கியவர். புரட்சிகர சக்திகளுடன் ஐக்கியம் மேற்கொண்டமைக்காக 12.03.1991 அன்று சென்னையில் இவர் கைது செய்யப்பட்டார். இவர் மதுரை, சென்னை சிறைகளிலும் வேலூர், துறையூர், மேலூர் சிறப்பு முகாம்களிலும் அடைக்கப்பட்டார். 17.02.1997இல் இவர் நிரபராதியென திண்டுக்கல் முதன்மை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியபோதும் விடுதலை செய்யப்படாமல் தொடர்ந்தும் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்தார். இறுதியாக எட்டு வருட சிறைவாழ்க்கையின் பின்னர் 03.04.1998 அன்று இந்தியா விலிருந்து வெளியேற்றப்பட்டார்.

ஏனைய பதிவுகள்

14715 மானுடம் தோற்றிடுமோ?.

எஸ்.கருணானந்தராஜா. சென்னை 600 017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, 7(ப.எண் 4), தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2019. (சென்னை 94: ஸ்கிரிப்ட் ஆஃப்செட்). xii, 180

14887 புனித பூமியில் பதிந்த சுவடுகள்.

எம்.ஐ.எம்.அப்துல் லத்தீப். புத்தளம்: புத்தளம் தமிழ்மொழி எழுத்தாளர் சங்கம், இல. 19, மௌலவி புவாட் (Fuard) ஒழுங்கை, 14வது ஒழுங்கை, மரிக்கார் வீதி, 1வது பதிப்பு, மார்ச் 2015. (புத்தளம்: மில்கொம் சிஸ்டம், இல.