12240 – சைப்பிரஸ் மற்றும் சூடான்: அவர்களது சமாதானத்தின் இரு உதாரணங்கள்.

நியமுவா வெளியீடு. கொழும்பு 10: நியமுவா வெளியீட்டகம், மக்கள் விடுதலை முன்னணி, 198/19, பஞ்சிக்காவத்தை வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2007. (புறக்கோட்டை: ஆர்.சீ. பிரின்டர்ஸ், அன்ட் பப்ளிஷர்ஸ், 70, மிஷன் வீதி).

110 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 21×14.5 சமீ., ISBN: 955-8696-08-0.

இலங்கையின் தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக சைப்பிரஸ் அல்லது சூடான் ‘மாதிரியை’ விடப் பொருத்தமான வேறொன்றும் இல்லை என்ற ஏகாதிபத்தியவாதிகளின் கூற்றை மக்கள் விடுதலை முன்னணி (JVP) மறுதலித்து இப்போலிக் கருத்துக்கு எதிராக மக்களை அணிதிரட்டும் நோக்குடன் சிங்களத்தில் ஜுலை 2006இல் வெளியிடப்பட்ட நூலின் தமிழாக்கமே இதுவாகும். இந்நூ லைத் தமது நியமுவா அமைப்பின்மூலம் பிரசுரித்துள்ளனர். இரண்டு பகுதிகளில் எழுதப்பட்டுள்ள இந்நூலின் முதலாம் பகுதியில் பிரிவினைவாதத்தால் அடிவாங்கும் சைப்பிரஸ், சைப்பிரசின் வரலாறு, சைப்பிரசின் தேசியப் பிரச்சினை, தற்போதைய நிலை ஆகிய அத்தியாயங்களும், இரண்டாம் பகுதியில் சூடான் ஒரே நாட்டிலிருந்து இரு நாடுகள் வரை, சூடானின் வரலாறு, சூடானிய தேசியப் பிரச்சினையின் தற்போதைய வடிவம், டாபூர் பிரச்சினை, சூடானுக்குள் ஐக்கிய நாடுகள் சபையின் தலையீடு, சூடானிய தேசியப் பிரச்சினையில் நோர்வேயின் தலையீடு, சூடானின் எண்ணெய்யோடு பிணைந்த அரசியல் பொருளாதார தொடர்புகள் ஆகிய அத்தியாயங்களும் உள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 48437).

ஏனைய பதிவுகள்

12846 – புலவர்மணி கட்டுரைகள்.

ஏ.பெரியதம்பிப்பிள்ளை (மூலம்), பெ.விஜயரெத்தினம், இரா.நாகலிங்கம் (தொகுப்பாசிரியர்கள்). திருக்கோணமலை: கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சு, வடக்கு-கிழக்கு மாகாணம், 1வது பதிப்பு, 1998. (திருக்கோணமலை: பதிப்பகத் திணைக்களம், வடக்கு-கிழக்கு மாகாணம்). (12) 159 பக்கம், விலை: ரூபா

12034 – எவ்வழி நல்வழி அவ்வழி நாடுவோம்: பல்சமய உறவாடல் ஏடு.

நீர்வை தி.மயூரகிரி. யாழ்ப்பாணம்: நீர்வை தி.மயூரகிரி சர்மா, ஊடக வளங்கள் பயிற்சிகள் நிலையம், 1வது பதிப்பு, டிசம்பர் 2009. (யாழ்ப்பாணம்: ஷாம்பவி பதிப்பகம், 276 கஸ்தூ ரியார் வீதி, கன்னாதிட்டி). xii, 66 பக்கம்,

14871 மின்மினிகளால் ஒரு தோரணம்.

முல்லை முஸ்ரிபா. கொழும்பு 10: வெள்ளாப்பு வெளி, ஏ 6, 2/1 என்.எச்.எஸ்.கலைமகள் வீதி, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 10: S & S Printers, 43, ஜயந்த வீரசேகர மாவத்தை). xv,

14745 உயிரில் கலந்த வாசம்.

க.சட்டநாதன். கொழும்பு 11: பூபாலசிங்கம் பதிப்பகம், 202, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, ஆடி 2019. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). vi, 105 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20.5×14.5 சமீ.,

12789 – சொப்ஹொக்கில்சின் கிரேக்க நாடகங்கள்: மூன்றாவது தொகுதி.முதலாவது பகுதி: மூன்று நாடகங்கள்.

சொப்ஹொக்கில்ஸ் (கிரேக்க மூலம்), ஈழத்துப் பூராடனார் (தமிழாக்கம்), எட்வேட் இதயச்சந்திரா (பதிப்பாசிரியர்). கனடா: ஜீவா பதிப்பகம், 1108 Bay Street, Toronto, Ontario M5S 2W9 1வது பதிப்பு, ஆவணி 1990. (கனடா: ரிப்ளெக்ஸ்