12241 – நட்சத்திரப் போர்:ஒரு யுத்த நோக்கு.

மு.வரதராசா. வந்தாறுமூலை: மு.வரதராசா, கிழக்குப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, மார்கழி 1996. (மட்டக்களப்பு: ஜெஸ்கொம் அச்சகம்).

xix, 99 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 18×12.5 சமீ.

சர்வதேச யுத்த அரசியல் பற்றிய ஆய்வுநூல். விண்வெளிக் கண்டுபிடிப்பும் மனித நலனும், மனிதனின் அறிவியல் வளர்ச்சி, அணு சக்தி யுகம், அமெரிக்காவின் ஆயுதப் பொருளாதாரப் போர் ஏற்படுத்தும் அவலநிலை, ஏவுகணை எதிர்ப்புக் கருவி அமைப்புக் கொண்ட புதுவகை நட்சத்திரப் போரும் அதற்கான செலவுகளும், போர் போர் போர் உலகப் போர், ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்காவின் போக்கு, போரின் மதிப்பு முடிவுரை ஆகிய ஒன்பது இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. நூலாசிரியர் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ண தேசிய பாடசாலையில் முகாமைத்துவ உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். (இந் நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 23336).

ஏனைய பதிவுகள்