12243 – ஆரம்ப பொருளியல்.

அ.விசுவநாதன். யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா புத்தகசாலை, காங்கேசன்துறை வீதி, 3வது பதிப்பு, 1976, 1வது பதிப்பு, 1966, 2வது பதிப்பு, 1972. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம்).

(8), 391 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 10.00, அளவு: 21X14 சமீ.

ஆறு பகுதிகளைக் கொண்டமைந்துள்ள இந்நூலில் பகுதி 1இல் ஆரம்ப உரையாக, உற்பத்தி, உற்பத்திக் காரணிகள் ஆகிய அத்தியாயங்களும், பகுதி 2இல் உற்பத்தி ஸ்தாபன அமைப்புகள், தொழில் தேர்ச்சி, உற்பத்தியின் அளவு ஆகிய அத்தியாயங்களும், பகுதி 3இல் சந்தைகள், அளிப்பும் கேள்வியும், எல்லை நிலைக் கோட்பாடு ஆகிய அத்தியாயங்களும், பகுதி 4இல் தேசிய வருமானம், பங்கீட்டுக் கோட்பாடு ஆகிய அத்தியாயங்களும், பகுதி 5இல் நாணயம் அல்லது பணம், வங்கித் தொழில்முறை, இலங்கை மகா வங்கி ஆகிய அத்தியாயங்களும், பகுதி 6இல் சர்வதேச வர்த்தகம், வெளிநாட்டு நாணயம், வேலையின்மையும் வர்த்தகச் சூழலும், அரசாங்க நிதி, பொருளாதாரத் திட்டம், மீட்சி வினாக்கள், கலைச்சொல் அகராதி ஆகிய அத்தியாயங்களுமாக மொத்தம் 21 அத்தியாயங்களில் பொருளியலின் அடிப்படைகள் விளக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24259).

ஏனைய பதிவுகள்