12246 – இலங்கை மத்திய வங்கி: பொருளாதார மீளாய்வு 1982.

இலங்கை மத்திய வங்கி. கொழும்பு 1: பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களம், இலங்கை மத்திய வங்கி, சனாதிபதி மாவத்தை, 1வது பதிப்பு, 1983. (கொழும்பு: குமரன் அச்சகம், 201, டாம் வீதி).

xiv, 424 பக்கம், 128 அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×19 சமீ.

இலங்கையின் பொருளாதாரப் போக்குகளையும் அபிவிருத்திகளையும் பற்றிய விரிவான ஆய்வைத் தரும் பொருளாதார மீளாய்வு, 1975ஆம் ஆண்டிற்கு முன்பு மத்திய வங்கி ஆண்டறிக்கையின் ஒரு பகுதியாக இருந்து வந்துள்ளது. 1975ஆம் ஆண்டிலிருந்து பொருளாதார மீளாய்வினை மத்திய வங்கி ஆண்டறிக்கையிலிருந்து வேறுபட்ட ஒரு வெளியீடாக வெளியிட முடிவுசெய்யப்பட்டது. இதற்கேற்ப 1982ஆம் ஆண்டுக்குரிய ஆண்டறிக்கை 1983 எப்ரல் மாதம் வெளியிடப்பட்டது. பொருளாதார மீளாய்வு, உயர் அலுவலர்களைக்கொண்ட ஆசிரியர் குழு வொன்றினால் பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களத்தினால் வெளியிடப் பட்டுள்ளது. பதினொரு பிரிவுகளின்கீழ் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இம்மீளாய்வு அறிக்கையில் தேசிய உற்பத்தியும் வருமானமும் செலவும், வேளாண்மை, கைத்தொழில், பொருளாதார சமூக செலவினம், குடித்தொகை, மனிதவலுப் பயிற்சி, தொழிவலுநிலை, விலைகளும் கூலிகளும், வர்த்தகம், சுற்றுலா, சென்மதி நிலுவை, அரச நிதி, நாணய, வங்கித் தொழில் அபிவிருத்திகள் ஆகிய விடயங்கள் பற்றிய 1982ஆம் ஆண்டுக்கான மீளாய்வு அறிக்கையிடப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 31122).

ஏனைய பதிவுகள்