12248 – பொருளாதார வளர்ச்சிக் கட்டங்கள்: பொதுவுடைமைவாதச் சார்பற்ற ஒரு பனுவல்.

W.W.றொஸ்ரோ (ஆங்கில மூலம்), திருமதி இரத்தினம் நவரத்தினம் (தமிழாக்கம்). கொழும்பு 3: இலங்கை கல்வி வெளியீட்டுத் திணைக்களம், 1வது பதிப்பு, 1976. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகம்).

xii, 211 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21X14 சமீ.

அமெரிக்காவின் மசச்சுஸற்ஸ் மாநிலத் தொழில்நுட்பக் கழகத்தின் பொருளாதார வரலாற்றுப் பேராசிரியரான W.W.Rostow அவர்களால் எழுதப்பெற்று லண்டன் Cambridge University Press நிறுவனத்தால் வெளியிடப்பெற்ற The Stages of Economic Growth என்ற நூலின் தமிழாக்கம் இது. இந்நூலின் தொடக்க அத்தியாயங்களில் பொருளாதார வளர்ச்சியின் பல்வேறு கட்டங்கள் பகுத்தாய்வு செய்யப்பட்டுள்ளன. பரம்பரைச் சமூகம், முன்னிலைமைக் காலம், வளர்ச்சியின் ஆரம்பம், முதிர்ச்சி, பெருவாரி நுகர்வுக் காலம் என முறையே வருகின்ற இவ்வைம்பெருங் கட்டங்களையும் பின்னர் ஆசிரியர் விரித்தும் விளக்கியும் எழுதியிருக்கிறார். பொதுவாக எல்லா நாடுகளுக்கும் பொருந்தத் தக்கவாறு, இற்றைக்காலப் பொருளாதார வரலாற்றை ஆதாரமாகக் கொண்டு, பொருளாதார வளர்ச்சியைப் படிமுறையாக ஆராய்கின்ற நூல் இது. முன்னுரை, வளர்ச்சியின் ஐந்து கட்டங்கள், ஆரம்பத்திற்கு வேண்டிய முன்னிலைமைகள், ஆரம்பம், முதிர்ச்சியை நோக்கி முன்னேறுதல், பெருவாரி நுகர்வுக் காலம், ருஷியாவிலும் அமெரிக்காவிலும் வளர்ச்சிமுறை, வளர்ச்சிக் கட்டங்களும் ஆக்கிரமிப்பும், வளர்ச்சிக் கட்டங்களும் சமாதானப் பிரச்சினையும், மார்க்சியமும் பொதுவுடைமைவாதமும் வளர்ச்சிக் கட்டங்களும் ஆகிய பத்து இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 35079).

ஏனைய பதிவுகள்

14414 தமிழ் எழுத்துக்கள்.

நூலாசிரியர் குழு. கொழும்பு: அரசகரும மொழிகள் திணைக்களம், தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சு, பாஷா மந்திரய, 341/7, கோட்டே வீதி, ராஜகிரிய, 2வது பதிப்பு, 2016, 1வது பதிப்பு, 2015.

12018 சிறுவர் உளநலம் : ஆரம்பப் பாடசாலை மாணவர்களுக்கு உதவும் ஆசிரியர் கைந்நூல்.

சா.சிவயோகன், கோகிலா மகேந்திரன், தயா சோமசுந்தரம். யாழ்ப்பாணம்: சாந்திகம், 15, கச்சேரி-நல்லூர் வீதி, 2வது பதிப்பு, ஜுலை 2005, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2002. (கொழும்பு: பிரின்ட் கெயார் பக்கேஜிங் லிமிட்டெட், 21, ஸ்ரீ