ஆசிரியர் குழு, பீலிக்ஸ் டீ பிலிப் (தமிழாக்கம்). கொழும்பு 4: பிறெட்ரிக் ஈபர்ட் ஸ்டிவ்டுங் (Friedrich Ebert Stiftung FES), 4, அடம்ஸ் அவென்யூ, 1வது பதிப்பு, 1998. (கொழும்பு: நியூ கணேசன் பிரின்டர்ஸ்).
250 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ., ISBN: 955-607- 021-4.
Friedrich Ebert Stiftung என்பது இலாபநோக்கமற்ற சமூக, சனநாயகத்திற்கும் தொழிலாளர் அமைப்பிற்கும் உரிய அடிப்படைக் கருத்துக்களுக்காகவும் மதிப்புகளுக்காகவும் உழைக்கும் ஓர் ஜேர்மன் தனியார் கல்வி நிறுவனமாகும். இந்நூல் அறிமுகம், தொழில் தருநர்-தொழிலாளர் உறவு, தொழில் ஒப்பந்தம், நியதி நிபந்தனைகள், சோதனையில் இருத்தல், தொழிலை முடிவுறுத்துதல், தொழிற்சங்கங்கள், முகாமைத்துவத்தில் வேலையாட்களின் பங்கேற்பு, அரசும் வேலையாளும், இயைபான தொழிற் சட்டங்கள், வேலையாட்களும் பகிரங்க அவசரகால நிலையும், தொழில் நியாய சபைகள், அரசியலமைப்புப் பாதுகாப்புகள், சர்வதேச உடன்படிக்கைகள், சர்வதேச தொழில் தாபனம் (ஐ.எல்.ஓ) ஆகிய 15 அத்தியாயங்களில் விரிவாக எழுதப்பட்டுள்ளது. ஆசிரியர் குழுவில் R.K.Wகுணசேகர, K.விஜயரத்தினம், J.C.வெலியாமுன, S.R.அதிகாரி, திருமதி அன்டனட் திருப்பதி, ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்நூலின் தமிழாக்கத்தை சட்ட வரைநர் திணைக்களத்தின் பிரதம மொழிபெயர்ப்பாளர் பீலிக்ஸ் டீ பிலிப் அவர்கள் மேற்கொண்டுள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 38009).