இலங்கைத் தொழிலாளர் கல்வியாளர் கழகம். கொழும்பு: இலங்கைத் தொழிலாளர் கல்வியாளர் கழகம், இல. 7, சேர்க்குலர் வீதி, மவுன்ட் லவீனியா, 1வது பதிப்பு, 1995. (களனி: வித்யாலங்கார அச்சகம்).
x, 181 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ., ISBN: 955- 9360-00-0.
இலங்கையில் 1893இல் தொழிற்சங்கம் தொடக்கப்பட்டு நூற்றாண்டுகள் நிறைவடைந்தமையையொட்டி வெளியிடப்பெற்றுள்ள சிறப்பு மலர். இலங்கைத் தொழிற்சங்கங்கள் பற்றிய கடந்த ஒரு நூற்றாண்டு கால வரலாற்று, பரிணாம வளர்ச்சி, மற்றும் அவற்றின் அனுபவங்கள் சிலவற்றைப் பற்றிய தகவல்களை வழங்குவது இச்சிறப்பு மலரின் நோக்கமாகின்றது. இதில் மும்மொழிகளிலுமான 32 கட்டுரைகள் உள்ளன. இவை அனைத்தும் தொழிற்சங்கக் கல்வித் துறையிலும், நேரடியான தொழிற்சங்க நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு அனுபவம் மிக்கவர்களால் எழுதப்பட்டுள்ளன. இவற்றில் 20 ஆங்கிலமொழியிலும், 8 சிங்கள மொழியிலும், 4 தமிழ்மொழியிலும் எழுதப்பட்டுள்ளன. தமிழ்மொழி மூலக் கட்டுரைகள் ‘மலைநாட்டவர்களும் அவர்கள் வரலாற்றின் ஒரு சிறு துளியும்’ (வீ.எஸ்.ராஜா, இலங்கை கிராமிய தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளர்), ‘இலங்கை தொழிற்சங்க வரலாற்றில் சில முக்கிய மைல்கற்களும் சமூக முன்னேற்றமும்’ (எஸ்.வி.சண்முகராஜா, அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளர்), ‘இலங்கைத் தொழிற் சட்டங்களின் அபிவிருத்தி’ (எஸ்.இராமநாதன், லங்கா தோட்டத் தொழிலாளர் யூனியன் பொதுச் செயலாளர்), ‘பெருந்தோட்டத்துறை தொழிலுறவுகளின் போக்கு ஒரு பொது நோக்கு’ (ஓ.ஆறுமுகம், இலங்கை மன்றக் கல்லூரியின் முதுநிலை விரிவுரையாளரும் தொழிலாளர் கல்வியாளர் கழகத்தின் உதவிப் பொருளாளரும்) ஆகிய தலைப்பு களில் இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 38531).