12256 – மேதின வரலாறும் அதன் போதனைகளும்.

வீ.எல்.பெரைரா (பொதுச் செயலாளர்). கொழும்பு 12: மலையக இளைஞர் பேரவை, 74. 2/1, டாம் வீதி, 1வது பதிப்பு, மே 1978. (அச்சக விபரம் தரப்படவில்லை).

12 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×13.5 சமீ.

மே தினம் எனப்படும் உலகத் தொழிலாளர் தினம் ஆண்டுதோறும் மே முதலாம் திகதி உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுவதாகும். 1889 ஜூலை 14 அன்று பாரீசில் சோசலிசத் தொழிலாளர்களின் ‘சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம்’ கூடியது. 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்படப் பலர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும், 1890 மே 1 அன்று அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டது. இந்த அறைகூவலே மே முதல் நாளை, சர்வதேச தொழிலாளர் தினமாக, மே தினமாக அனுஷ்டிப்பதற்கு வழிவகுத்தது. இந்நூல் மேதினம் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளையும், இலங்கையின் பொருத்தப்பாடுகளையும் எளிய நடையில் விளக்குகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2750).

ஏனைய பதிவுகள்

13017 ஈழநாதம்-வன்னிப் பதிப்பு: முதலாண்டு நிறைவு மலர் 1994.

மலர்ஆசிரியர் குழு. கிளிநொச்சி: ஈழநாதம் அலுவலகம், 1வது பதிப்பு, 1994. (கிளிநொச்சி: சந்திரன் பதிப்பகம்).165 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 150.00, அளவு: 23.5×18 சமீ. ஈழநாதம் நாளிதழ் 19.02.1990 யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. தனது

14936 நிதியின் நினைவு: தம்பிமுத்து நிதிராஜா நினைவுமலர்-11.04.1998.

த.நீதிராஜா குடும்பத்தினர். கொழும்பு 13: த.நீதிராஜா, 89 புதுச்செட்டித் தெரு, 1வது பதிப்பு, ஏப்ரல் 1998. (கொழும்பு 12: லீலா அச்சகம், சின்னத்துரை பில்டிங், 182, மெசெஞ்சர் வீதி). (6), 88 பக்கம், அட்டவணைகள்,

12358 – இளங்கதிர்: 29ஆவது ஆண்டு மலர் 1994-1995.

H.M.கலால்தீன் (இதழாசிரியர்). பேராதனை: தமிழ்ச்சங்கம், பேராதனைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1995. (களுபோவில: டெக்னோ பிரின்ட், இல. 6, ஜெயவர்த்தன அவென்யூ, தெகிவளை). (20), 111 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

14326 இலங்கைக் குடியரசின் அரசியலமைப்பு: முதலாம் பாகம் .

இ.முத்துத்தம்பி. வட்டுக்கோட்டை: இ.முத்துத்தம்பி, பொருளியல் விரிவுரையாளர், யாழ்ப்பாணக் கல்லூரி, 1வது பதிப்பு, 1974. (யாழ்ப்பாணம்: கவின் அச்சகம், 122, நாவலர் வீதி). viii, 270 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 5.95, அளவு: 22×14

12107 – திருக்கோணமலை இராமகிருஷ்ண சங்க ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி அருள்மிகு சித்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேக மலர்.

சிவயோகநாதன் பிரேம் ஆனந்த் (இதழாசிரியர்). திருக்கோணமலை: இந்து மாணவர் மன்றம், ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1997. (கொழும்பு 14: போகய்ன்வில்லா (Bougainvilla) பிரின்டர்ஸ்). (20), 46 பக்கம், விலை: