12258 – போரின் பின்-முன்நோக்கிய நகர்வு.

சி.வி.விக்னேஸ்வரன். கொழும்பு 11: அதிகாரத்தைப் பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கம் (Movement for unity with PowerSharing- MUPS), இல. 72, பாங்க்ஷால் வீதி, 1வது பதிப்பு, மார்ச் 2014. (அச்சக விபரம் தரப்படவில்லை).

52 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.

வடமாகாணசபை முதல்வர் நீதியரசர் க.வி.விக்கினேஸ்வரன் அவர்களால் 2014 பெப்ரவரி 13 ஆம்திகதி தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்ற ‘போருக்குப் பின்னரான சமூகப் பொருளாதார அபிவிருத்தி’ என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தேசிய மாநாட்டில் நிகழ்த்திய பிரதான உரையின் மும்மொழிகளிலுமான எழுத்து வடிவம் இதுவாகும். ‘போரின் பின்னரான முன்னோக்கிய நகர்வு என்பது அரசியல் அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்ளும் தேசிய ஐக்கியமாக மட்டுமே இருக்கமுடியும் என்பதை இங்கே வடமாகாண முதல்வர் க.வி.விக்கினேஸ்வரன் தர்க்கரீதியாக விளக்கியுள்ளார். தேசிய ஐக்கியம் என்ற தலைப்பு, பார்வையற்றோர் ஆளாளுக்கு யானையைத் தொட்டுத் தடவிப் பார்த்து கருத்துச் சொல்லும் விடயத்தைப் போல இந்நாட்டில் இருக்கின்றது. அது அப்படி இனிமேலும் இருக்க முடியாது. இருக்கவும் கூடாது. தேசிய ஐக்கியம் என்பது உணரப்படக் கூடிய, புரியக்கூடிய திட்டவட்டமான விடயம் ஆகும். அதற்கான முன்நிபந்தனை சமத்துவம் ஆகும். அந்த சமத்துவம் இனங்களுக்கிடையே அரசியல் அதிகாரங்கள் பகிரப்படும்போது மாத்திரம் சாத்தியமாகும். ஆகவே அரசியல் அதிகார பகிர்வுக்கு எதிரானவர்கள் தான், இந்த நாட்டின் ஐக்கியத்துக்கு எதிரான பிரிவினைவாதிகள். அரசியல் அதிகார பகிர்வுக்கு ஆதரவானவர்கள் இந்த நாட்டின் ஐக்கியத்துக்காகப் பாடுபடுபவர்கள்’. (மனோ கணேசன், முகவுரையில்).

ஏனைய பதிவுகள்