12258 – போரின் பின்-முன்நோக்கிய நகர்வு.

சி.வி.விக்னேஸ்வரன். கொழும்பு 11: அதிகாரத்தைப் பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கம் (Movement for unity with PowerSharing- MUPS), இல. 72, பாங்க்ஷால் வீதி, 1வது பதிப்பு, மார்ச் 2014. (அச்சக விபரம் தரப்படவில்லை).

52 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.

வடமாகாணசபை முதல்வர் நீதியரசர் க.வி.விக்கினேஸ்வரன் அவர்களால் 2014 பெப்ரவரி 13 ஆம்திகதி தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்ற ‘போருக்குப் பின்னரான சமூகப் பொருளாதார அபிவிருத்தி’ என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தேசிய மாநாட்டில் நிகழ்த்திய பிரதான உரையின் மும்மொழிகளிலுமான எழுத்து வடிவம் இதுவாகும். ‘போரின் பின்னரான முன்னோக்கிய நகர்வு என்பது அரசியல் அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்ளும் தேசிய ஐக்கியமாக மட்டுமே இருக்கமுடியும் என்பதை இங்கே வடமாகாண முதல்வர் க.வி.விக்கினேஸ்வரன் தர்க்கரீதியாக விளக்கியுள்ளார். தேசிய ஐக்கியம் என்ற தலைப்பு, பார்வையற்றோர் ஆளாளுக்கு யானையைத் தொட்டுத் தடவிப் பார்த்து கருத்துச் சொல்லும் விடயத்தைப் போல இந்நாட்டில் இருக்கின்றது. அது அப்படி இனிமேலும் இருக்க முடியாது. இருக்கவும் கூடாது. தேசிய ஐக்கியம் என்பது உணரப்படக் கூடிய, புரியக்கூடிய திட்டவட்டமான விடயம் ஆகும். அதற்கான முன்நிபந்தனை சமத்துவம் ஆகும். அந்த சமத்துவம் இனங்களுக்கிடையே அரசியல் அதிகாரங்கள் பகிரப்படும்போது மாத்திரம் சாத்தியமாகும். ஆகவே அரசியல் அதிகார பகிர்வுக்கு எதிரானவர்கள் தான், இந்த நாட்டின் ஐக்கியத்துக்கு எதிரான பிரிவினைவாதிகள். அரசியல் அதிகார பகிர்வுக்கு ஆதரவானவர்கள் இந்த நாட்டின் ஐக்கியத்துக்காகப் பாடுபடுபவர்கள்’. (மனோ கணேசன், முகவுரையில்).

ஏனைய பதிவுகள்

12326 – நிறைவான கல்விக்கு.

ச.சுப்பிரமணியம். யாழ்ப்பாணம்: கல்விக் கதிர், 342 பருத்தித்துறை வீதி, நல்லூர், 1வது பதிப்பு, ஐப்பசி 1997. (கொழும்பு 14: கோல் குவிக் பிறின்டர்ஸ்). (4), 117 பக்கம், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21

Traktandum Online Spielautomaten Inside Deutschland

Content Spiele Ist und bleibt Die gesamtheit Erreichbar Spielautomat Gleichförmig Programmiert? Berechne Deine Spielautomaten Die gesamtheit Wichtige Dahinter Einen Bauernprotesten As part of Brandenburg Spielautomaten

14573 இராப்பாடிகளின் நாட்குறிப்பு.

தி.வினோதினி. மன்னார்: மன்னார் தமிழ்ச் சங்கம், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2016. (யாழ்ப்பாணம்: பிள்ளையார் நேரச்சுப் பதிப்பகம், 676, பருத்தித்துறை வீதி, நல்லூர்). 105 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×14.5 சமீ.,

14899 அருளொளி: ஸ்ரீ கார்த்திகேசு சுவாமிகள் நூற்றாண்டுச் சிறப்பு மலர் 1896-1996.

மா.கணபதிப்பிள்ளை (செயலாளர்). கொழும்பு 2: அருளொளி நிலையம், 31/21, டோசன் வீதி, 1வது பதிப்பு, 1996. (கொழும்பு 02: நியூ ராஜன் பிரின்ட், இல.25, கியூ லேன்). 50+(10) பக்கம், புகைப்படங்கள், சித்திரங்கள், விலை: