12260 – நீதிமுரசு 1989.

இதழாசிரியர் குழு. கொழும்பு 12: இலங்கை சட்டக் கல்லூரி தமிழ் மன்றம், 244, ஹல்ஸ்ரொப் வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 1989. (கொழும்பு 12: குமரன் அச்சகம், 201 டாம் வீதி).

138 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×18.5 சமீ.

இலங்கைச் சட்டக் கல்லூரியின் சட்ட மாணவர் தமிழ் மன்றத்தின் 1989ஆம் ஆண்டுக்கான ஆண்டு மலர் பல்வேறு தமிழ் ஆங்கிலக் கட்டுரைகளுடன் வெளிவந்துள்ளது. தேசவளமைச் சட்டத்தின் ஏற்புடைமை (நா.செல்வக்குமாரன்), ஒத்த நிகழ்வுகள் சான்று-ஒரு பார்வை (செ.சதானந்தன்), தேடிய தேட்டம் அதன் ஒன்றிணைப்பு முறையிலிருந்து தனிப்பட்ட ஆதன முறைக்கு மாற்றம் (நாகேந்திரா), கலாநிதி மௌனகுருவுடன் நேர்காணல் (செல்வி. லிங்கேஸ்வரி காசிப்பிள்ளை), சட்டத்தின் முன் யாவரும் சமம் (ஆ.ஜெகசோதி), வழக்காற்றுத் திருமணம் நடைமுறையிலுள்ள திருமண பதிவுக் கட்டளைச் சட்டத்தினை புறத்தொகுக்கு கின்றதா? முஸ்லிம் சட்டமும் வாரிசுச் சொத்துப் பகிர்ந்தளிப்பும் (எம்.லாபிர் தாஹிர்), Absolute Liability (Ryaland vs Fletcher) கோட்பாட்டின் விருத்தியும் இலங்கை வழக்குகளில் அதன் தாக்கமும் (எம்.எஸ்.எம்.கமில்), அரசியலமைப்புக்கான 13ஆவது 16ஆவது திருத்தங்களும் மொழிகளும் (வி.புவிகரன்), இஸ்லாமிய சான்றுச் சட்டம் (என்.எம்.எம்.பிஷ்ருல் அமீன்), இலங்கையின் நரம்புமண்டல தாக்கத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கான நியதிச் சட்டப் பாதுகாப்பினை அறிமுகப்படுத்தல் அவசியமா?, புலமைச் சொத்துச் சட்டமும் நேர்மையற்ற போட்டியும் (மனோ இராமநாதன்) ஆகிய முக்கியமான கட்டுரைகள் இவ்விதழில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 10194).

ஏனைய பதிவுகள்

Slot Lucky Halloween

Content Halloween Horrors Jogos Dado Vs Jogos Com Bagarote Atual Jogos No Play Bem Para Jogadores Brasileiros Betfair: Avantajado Aplicativo Utensílio Ánteriormente de aclamar barulho