12267 – இலங்கைக்கான ஜனநாயக அரசியல் கட்டமைப்பு.

அரசயாப்பு சீர்திருத்த இயக்கம். கொழும்பு 3: அரசயாப்பு சீர்திருத்த இயக்கம், 18/2 அலோய் சாலை, 1வது பதிப்பு, பெப்ரவரி 1995. (அச்சக விபரம் தரப்படவில்லை).

v, 16 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.

இலங்கையின் அரசியலானது, கடந்த ஒரு தசாப்தத்திற்கும் மேலாக மிகவும் நெருக்கடிகள் நிறைந்துள்ளதாகவே காணப்படுகின்றது. எமது அரசியல் கட்டமைப்பில் பாரிய மாற்றங்களை மேற்கொள்வதன் மூலமே இந்த நெருக்கடி களைத் தீர்த்துவைக்க இயலும். இனவாத பிரச்சினையைத் தீர்க்கத் தவறியமை, அரசியல் வன்முறைகள் தொடர்ந்தும் பிரயோகிக்கப்பட்டமை, நாட்டிலுள்ள ஜனநாயக நிறுவனங்களும், ஜனநாயக நடைமுறைகளும் பலவீனப்பட்டமை, அரசினது சர்வாதிகாரப் போக்குகள் போன்ற நிலைமைகள் என்பன எமது ஜனநாயக அரசியல் கட்டமைப்பில் காணப்படுகின்ற குறைபாடுகளையும் ஜனநாக நடைமுறைகளைப் பலப்படுத்துவதற்கு விடுக்கப்படுகின்ற புதிய கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதில் உள்ள இயலாத் தன்மையையும் மிகத் தெளிவாகக் காண்பிக்கின்றன. இந்நிலைமையை அடிப்படையாக வைத்து அரசியல் யாப்பு சீர்திருத்த இயக்கம் புதிய அரசியல் கட்டமைப்பு தொடர்பாகத் தன் அவதானிப்பு களையும் கருத்துக்களையும் இந்நூலில் முன்வைத்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 852/25489. நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தின் சேர்க்கை இலக்கம் 014033).

ஏனைய பதிவுகள்