சுமனசிறி லியனகே. கொழும்பு: திட்டமிடுதல் மற்றும் வடிவமைப்புப் பிரிவு, இன விவகார மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சு, 1வது பதிப்பு, 1997. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகத் திணைக்களம்).
(4), 28 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×17 சமீ.
அரசியல் யாப்பு என்றால் என்ன? அரசியல் யாப்பினூடாக சனநாயக ரீதியானதும் நியாயமானதுமான சட்டப் புறவமைப்பினை உருவாக்குவதன் மூலம் அரசுக்கு ஒரு சிறப்புருவம் எவ்வாறு வழங்கப்படுகின்றது என்பன போன்ற விடயங்களை என்பதை இந்நூல் எளிய முறையில் சாதாரண மக்களுக்கும் விளங்கும் வகையில் சித்திரங்களின் உதவியுடன் விளக்கப்படுத்தியுள்ளது. பேராசிரியர் ரஞ்சித் அமரசிங்க, கலாநிதி ஏ.எம்.நவரத்ன பண்டார, கலாநிதி மைக்கல் பெர்னாந்து ஆகியோரின் மேற்பார்வையில் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 046399).