12269 – தொழில் சட்டங்கள் 01.

ரி.தர்மலிங்கம் (தமிழாக்கம்). கொழும்பு 5: தொழிலாளர் கல்விக் கிளை, தொழில் திணைக்களம், 1வது பதிப்பு, 2002. (புறக்கோட்டை: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம், பானலுவ, பாதுக்க, 130 சீ, பாகொட வீதி, பிட்டக்கோட்டே).

vi, 82 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.

இலங்கையில் கைத்தொழில் அமைதியையும் வினைத்திறனையும் அதிகரிக்க வேண்டுமாயின் தொழில்கொள்வோரும் ஊழியர்களும் தத்தமது உரிமைகளையும் கடமைகளையும் பற்றிய தெளிவான விளக்கத்தைக் கொண்டிருத்தல் அவசியம் என்ற வகையில் இந்நூல் தொழிலாளர், தொழில்தருவோர் தொடர்பான, அவர்களுக்கு அன்றாடம் அறிந்துவைத்திருக்கவேண்டிய சட்டங்களைத் தனியாகத் தொகுத்து, அதனைத் தமிழில் தமிழாக்கம் செய்து தருகின்றது. சம்பளச் சபைகள் கட்டளைச் சட்டம், கடை அலுவலக ஊழியர் சட்டம், ஊழியர் சேமலாபநிதிச் சட்டம், ஊழியர் நம்பிக்கை நிதியம், பணிக்கொடைக் கொடுப்பனவு, மகப்பேற்று நலன்கள் சட்டம், தொழிலாளர் நட்டஈட்டு கட்டளைச் சட்டம், தொழிற் பிணக்குகள் சட்டம், தொழிற்சாலைகள் கட்டளைச் சட்டம், பெண்கள், இளைஞர், சிறுவர்களை வேலையில் ஈடுபடுத்தும் சட்டம், உச்ச வினைத்திறனுக்கு ஐந்து எஸ் (‘5S’) ஆகிய பதினொரு இயல்களின்கீழ் ஆசிரியர் இந்நூலை விரிவாக எழுதி வழங்கியுள்ளார். நூலாசிரியர் யாழ்ப்பாண மாவட்டத்தின் பிராந்திய பிரதித் தொழில் ஆணையாளராகப் பணியாற்றியவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 33450).

மேலும் பார்க்க: 12254

344.032 சிறுவர் பாதுகாப்புச் சட்டம் மேலும் பார்க்க: 12282

ஏனைய பதிவுகள்